கடலிலுள்ள கரியமில வாயுவை உறிஞ்சும் தொழில்நுட்பத்தைக்கொண்டு கடலைச் சுத்தம் செய்யத்தொடங்கியிருக்கிறது சீக்யூர் (SeaCURE) என்ற நிறுவனம். இதனால் காற்றிலுள்ள கரியமில வாயுவைக் கடலால் மேலும் திறனுடன் உறிஞ்சமுடியும். புவி வெப்பமயமாதலைத் தடுக்க மேற்கொள்ளும் பல்வேறு முயற்சிகளுள் ஒன்றாக இது உள்ளது.
கார்பன்-டை-ஆக்சைடு என்பது கார்பனை அதாவது, கரியை அடிப்படையாகக்கொண்ட வாயு. இந்த வாயு நீரில் கலக்கும்போது அமிலமாக மாறக்கூடியது. இதனால் இது ‘கரி அமில வாயு’ எனப்படுகிறது.
கரியமில வாயு என்றவுடனே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது எது? புவி வெப்பமயமாதல், பசுமை இல்ல விளைவு, காற்று மாசாக்கி போன்ற பதங்கள்தான் நிச்சயம் நினைவுக்கு வந்திருக்கும் இல்லையா? நம்மைப் பொறுத்தவரை கரியமில வாயு ஒரு வில்லன். நிதர்சனம் என்ன தெரியுமா? நமது வளிமண்டலத்தில் வெறும் 0.04 சதவீதமே இருக்கும் ஒரு பாவப்பட்ட எளிய வாயுதான் கரியமில வாயு. கரியமில வாயு என்ற ஒன்று இல்லையெனில் பூமி, உயிர்கள் வாழத்தகுந்த இடமாக இருக்காது.















Add Comment