Home » ஹர்மூஸ் முனையிலிருந்து சமையலறை வரை
இந்தியா

ஹர்மூஸ் முனையிலிருந்து சமையலறை வரை

மத்தியக் கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழ்நிலையால் இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வீடு, வணிகச் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. வணிக சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கல்லூரிகள் விடுமுறை அளித்துள்ளன. தங்கும் விடுதிகளில் உள்ளவர்களுக்கும், அலுவலகக் கேன்டீன்களிலும் நிர்வாகங்கள் உணவை எளிமைப்படுத்தியுள்ளன. வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால் டீக்கடைகளும் உணவகங்களும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

வணிக சிலிண்டர்கள் பற்றாக்குறையால் உணவகங்கள் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளன? ஈரோட்டில் உள்ள மாயா பஜார் உணவாக மேலாளரிடம் கேட்டோம்.

‘இரண்டு நாள்களுக்கு ஒரு சிலிண்டர் கிடைப்பதே சிரமமாக இருக்கிறது. சில உணவுகளைக் குறைத்துவிட்டோம். இப்போது விறகு அடுப்பை அதிக அளவில் பயன்படுத்துகிறோம். விறகு விலையும் அதிகரித்துவிட்டது. முன்பு ஒரு டன் விறகு எட்டாயிரம் ரூபாயாக இருந்தது. இப்போது பத்தாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்ந்தால் விறகு விலை இன்னும் அதிகரிக்கும். காரணம் டீக்கடைகள், சிறு உணவகங்கள் அனைத்தும் முழுமையாக விறகு அடுப்பு உபயோகிக்கத் தொடங்கிவிடுவார்கள்.’

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!