நவம்பர் 11ஆம் தேதி உலகம் முழுவதும் உலக ஒற்றையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. காதலர் தினம், காதலைத் தெரிவிக்கும் தினம், ரோஜா தினம், தேசியத் தம்பதிகள் தினம் எல்லாம் எல்லோருக்கும் தெரியும். அது என்ன உலக ஒற்றையர் தினம்?
ஒற்றையர் தினம் சீனாவில் தொடங்கப்பட்டது. ஒற்றையர் என்றால் 90’s கிட்ஸ் என்று சொல்லப்படும் தொண்ணூறுகளில் பிறந்தவர்கள்தான் பெரும்பாலானவர்களுக்கு நினைவு வருவார்கள். இந்த தினமும் தொண்ணூறுகளில்தான் முதலில் கொண்டாடப்பட்டது. அனைத்துத் திருவிழாக்களும் குடும்பத்துடன் கொண்டாடக் கூடியது. தனியாக இருப்பவர்களுக்குப் பண்டிகைகள் கொண்டாட ஆர்வம் இருக்காது. பெற்றோர் இருந்தாலும் படிப்பு, வேலை போன்ற காரணங்களால் வெளியூர், வெளிநாடுகளில் தனியாக வசிப்பவர்கள் அவர்களுடைய பண்டிகைகளைக் கொண்டாட ஆர்வம் காட்டமாட்டார்கள். அவர்கள் சார்ந்த பண்டிகை சிறப்பு உணவுகள் சாப்பிடக்கூட ஆர்வம் காட்டமாட்டார்கள். குறிப்பிட்ட வயதுக்கு மேல் திருமணமாகாமல் பெற்றோர்களுடன் வசிப்பவர்களுக்குக் கூடப் பண்டிகைகள் கொண்டாடப் பெரிதாக விருப்பம் இருக்காது.
அவர்களுக்குத்தான் இந்த ஒற்றையர் தினம். எப்போது வேண்டுமானாலும் தாங்கள் விரும்பும் எதை வேண்டுமானாலும் செய்யலாம். தங்களைத் தாங்களே கொண்டாடிக் கொள்வது. தங்களுக்குத் தாங்களே பரிசளித்துக் கொள்வது. இவைதான் ஒற்றையர் தினத்தின் சாராம்சங்கள்.
Add Comment