Home » சிலிண்டர் தட்டுப்பாட்டுக் காலத்தில் சிந்திக்க ஒரு சம்பவம்
சாகசம்

சிலிண்டர் தட்டுப்பாட்டுக் காலத்தில் சிந்திக்க ஒரு சம்பவம்

பள்ளிக்குச் சென்ற பிள்ளைகள் வீட்டுக்கு வரவில்லை. புகார் கொடுத்து மூன்று மாதங்கள் தேடிப் பார்த்திருக்கிறார்கள். எந்தப் பலனும் கிடைக்காததால் அவர்கள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு, ஈமக்கிரியைகளும் நடத்தப்பட்டன. ஆனால் பதினைந்து மாதங்கள் கழித்து அந்த ஆறு சிறுவர்களும் திரும்பி வந்தார்கள்.

இது 1965ஆம் ஆண்டு டோங்கா (Tonga) நாட்டில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம்.

தெற்கு பசிபிக் கடலில் இருக்கும் ஒரு குட்டித் தீவு டோங்கா (Tonga). அங்கே இருந்த ‘செயின்ட் ஆண்ட்ரூஸ்’ போர்டிங் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த அந்த ஆறு மாணவர்களுக்கும் (லூக், ஸ்டீபன், சியோன், டேவிட், கோலோ மற்றும் மோனோ), பள்ளியின் கடுமையான விதிகள் பிடிக்கவில்லை. டீன் ஏஜ் பருவத்தில் இருந்த அந்த மாணவர்கள், சுதந்தரமாக வாழ வேண்டும் என்ற ஆசையில் ஃபிஜி (Fiji) அல்லது நியூசிலாந்துக்குத் தப்பிச் செல்ல முடிவெடுத்தார்கள்.

1965 ஜூன் மாதத்தின் ஓர் இரவு. யாரிடமும் சொல்லாமல் துறைமுகத்தில் இருந்த ஒரு பழைய மீன்பிடிப் படகை அந்த ஆறு சிறுவர்களும் திருடினர். அந்தப் பயணத்துக்காக அவர்கள் எடுத்துச் சென்ற உணவு மிகவும் குறைவு. இரண்டு மூட்டை வாழைப்பழங்கள், சில தேங்காய்கள், ஒரு சிறிய கேஸ் ஸ்டவ் மட்டுமே அவர்களிடம் இருந்தன. சுதந்தரக் காற்றைச் சுவாசிக்கப்போகும் உற்சாகத்தில் அவர்கள் பயணத்தைத் தொடங்கினர். ஆனால் கடல் அவர்களுக்கு ஒரு கோரமான பாடத்தைக் கற்றுக்கொடுக்கக் காத்திருந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!