1. நாற்பது வயதுக் குழந்தை
எனக்கு ஏழு வயது நிறைவடைய மூன்று மாதங்கள் இருந்தபோது அவன் பிறந்தான். அன்றைக்கு ஜூலை மாதம் இரண்டாம் தேதி, 1979வது வருடம். பிறக்கும்போது அவனுக்கு நாற்பது வயதாக இருக்கும் என்று முதல் நாள் இரவு படுக்கப் போகும் முன்பு அப்பா சொன்னார். அந்தத் தகவல் தந்த திகைப்பில் சரியாகத் தூக்கம் வரவில்லை.
நள்ளிரவா அதிகாலையா என்று சரியாகத் தெரியாத நேரத்தில் எழுப்பினார். கண் எரிய எரிய வெந்நீரைக் கொட்டிக் குளிப்பாட்டி, ஒரு டவலைச் சுற்றி, ‘போ’ என்று அம்மா சொன்னாள். முகத்து ஈரத்தைத் துடைக்க நேரமின்றி அப்படியே நைஸில் பவுடர் ஒற்றி, ஐந்து இழுப்புகளில் அப்பா திருமண் இட்டுவிட்டார். சில நிமிடங்களில் அவரும் தயாராகி, என் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வெளியே வந்தார்.
அதற்குமுன் நான் அவ்வளவு இருட்டையும் கண்டதில்லை; அத்தனை பெரிய கூட்டத்தையும் கண்டதில்லை. வீதி முழுதும் அச்சமூட்டும் அளவுக்கு மக்கள் நிறைந்திருந்தார்கள். கால் வைக்க இடமில்லாத நெரிசலைத் துருவித் துருவி வழி உண்டாக்கியபடியே அப்பா விரைந்தார். அவரது வலது கை, என்னுடைய இடது கையைப் பற்றியிருந்தது. வலிக்கும் அளவுக்குப் பிடிமானம் அழுத்தியது. ஆனால் சிணுங்க முடியாது. பாதித் தூக்கமும் கண் எரிச்சலும் இருந்தன. அதைப் பெரிதுபடுத்த முடியாது. அப்பாவின் முகம் கொதி வந்த உலையைப் போலிருந்தது. சுற்றியிருந்த மக்களும் அவரைப் போலத்தான் இருந்தார்கள். எல்லோரும் முண்டியடித்தார்கள். எல்லோருக்கும் அவசரம் இருந்தது.
அத்தி வரதர் தரிசனம் உங்கள் எழுத்தில் …அருமை…
வழக்கம்போல தொடரின் உள்ளே இழுத்துச்சென்று 1979 காலத்திற்கே அழைத்துச்சென்று அத்தி வரதரை சேவிக்கச் செய்துவிட்டது உங்களது எழுத்தும் நடையும். பிரமாதமான ஆரம்பம். வாரம் தோறும் கைப்பிடித்து உடன் வர காத்திருக்கிறேன். வாழ்த்துகள். நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு
பொலிக!பொலிக!
விஸ்வநாதன்
சில வருடங்களுக்கு முன்னர் அத்தி வரதரை பக்தகோடிகள் பெருங்கூட்டமாக தரிசித்து வந்த போதும், அத்திவரதர் குறித்த சிறப்புகளை ஏராளமாக எடுத்துரைத்த பத்திரிகைகளை படித்த போதும் வராத பக்தி இதை படிக்கும் போது வருகிறது.
நீங்கள் அப்படி நினைத்து எழுதவில்லை என்பது நன்கு தெரியும்.என்றாலும் உங்கள் எழுத்தின் மூலம் வரதன் மனமெங்கும் வியாபித்து நிற்கிறான்.படமும் தீர்க்கமான அழகு.