Home » சாத்தானின் கடவுள் – 6
சாத்தானின் கடவுள் தொடரும்

சாத்தானின் கடவுள் – 6

6. பிரதிகளின் புதைகுழி

மைத்ராவருணி வசிட்டன் அன்றைக்குச் சிவப்புக் குதிரை என்று குறிப்பிட்டது சூரியன். இதைப் புரிந்துகொள்வதற்கு அந்தப் புத்தகத்தின் சில நூறு பக்கங்களைப் படிக்க வேண்டியிருந்தது. இந்தக் கவிகளிடமும், கவியென எண்ணிக்கொள்வோரிடமும் உள்ள பெரும் பிரச்னை இதுதான். நேரடியாக ஒன்றைச் சொல்லவே மாட்டார்கள். வடையும் போண்டாவும் தின்று வளர்ந்தவனுக்கு சமோசாவே ஆகாத அந்நியம். இதில் சூனியத்தில் மறைந்திருக்கும் பூரணத்தைத் தேடிப் பிடியென்றால் எங்கே போவான்?

மைத்ராவருணி வசிட்டன் புன்னகை செய்தான். ‘கொடுப்பவன் எவனோ, அவனே அனைத்தும்.’

‘ஏன், வருணன் கொடுப்பதில்லையா?’

‘ஆம். ஐயமில்லை.’

‘அக்னி தருவதில்லையா?’

‘அவனன்றி வேறேது?’

‘நீங்களும் நானும் மூச்சு விடுவது யாரால்?’

‘சரியே.’

‘காலுக்குக் கீழே நிலம் பிளந்தால் தெரியும்!’

‘சொல்லாதே. ப்ருத்வி (புவி) மாதாவும் தியாயுஸ் (வான்) பிதாவுமின்றி ஏதுமில்லை.’

‘இருந்துவிட்டுப் போகட்டும். எனக்கு அவன் எங்கிருக்கிறான் என்று சொல்லுங்கள்.’

‘இவர்களில் யாரும் உனக்கு இதுவரை பதிலளிக்கவில்லையா?’

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • இது ஒரு கனமான அத்தியாயம்.
    முதலில் தங்கள் சமரசமின்மைக்கும் துணிச்சலுக்கும் தலைதாழ்த்திய வணக்கங்கள் சார்.
    மதங்களின் பிரதிகள் வழியாக அவனைக் கண்டடைய முடியாது என்பதைப் பொதுவெளியில் கூறவும் ஒரு துணிச்சல் வேண்டும். தாங்கள் கூறியது ஆகச்சிறந்த உண்மையாகப்படுகிறது. “ஒரு கனவுநிலை மெயம்மைக் கோட்டையை அவை வெகு அநாயாசமாகச் சிருஷ்டித்து விடுகின்றன”. எப்படிப்பட்ட வரிகள் சார்!

    பிரதிகள் பெருங்கவிகளால் இயற்றப்பட்டிருக்கின்றன என்ற யதார்த்த அணுகுண்டைத் தூக்கிப்போட்டிருக்கிரீர்கள். அது எங்கெல்லாம் வெடித்து உங்களுக்குக் கண்டனங்களைப் பெற்றுத்தந்ததோ தெரியவில்லை.

    மாய யதார்த்தப் பாணியில் துவந்த யுத்தத்தை நடத்திய விதம் அருமை.

    ஒருவழியாக, சாத்தானின் கடவுளைத் தொட்டு விட்டீர்கள்.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!