Home » AI: இனி பேசிக் கொல்லவும் தயார்!
அறிவியல்-தொழில்நுட்பம்

AI: இனி பேசிக் கொல்லவும் தயார்!

கூகுள், ஓப்பன் ஏ.ஐ. ஆகிய உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் இரண்டுமே மிக இயல்பாக மனிதர்கள் போலவே பேசும் உரையாடல செயலிகளைக் கொண்டுவந்து விட்டன. சந்தேகமின்றி இதுவோர் ஒலிப்புரட்சிதான்.

கூகுள், “சவுண்ட் ஸ்ட்ரோம்” “(SoundStorm) என்று பெயரிடப்பட்ட தங்களது புதிய ஒலிச் செயலியை வெளியிட, ஓப்பன் ஏஐ ‘இதென்ன பிரமாதம்’ என்று தங்களது ”ஏர்” (AIR) செயலியை அறிமுகப்படுத்தியது. இந்த இரண்டு செயலிகளுமே செயற்கை நுண்ணறிவைக் கொண்டு நம்பகமான, நெடுநேரம் தடையில்லாமல் இயங்கவல்ல, மனிதர்கள் போலவே பேசக்கூடிய, அதிலும் நுணுக்கமான குரல் வேறுபாடுகளைக் காட்டக்கூடிய திறன் கொண்டவையாக உருவாக்கப்பட்டிருக்கின்றன.

பெயரைப் போலவே இந்த அறிவிப்பு ஒரு பெரிய மனிதவளத்தைக் குறி வைத்திருக்கும் புயல் என்றுதான் சொல்லவேண்டும். மிகக் குறிப்பாக இந்தியாவில் ஐடியல் கஸ்டமர் சர்வீஸ் என்ற வேலையில் உங்கள் சுற்றத்திலேயே சில நூறு பேரையாவது சென்னையில் நீங்கள் பார்த்திருக்கக்கூடும். சென்னையில் பிரதான நிறுவனங்கள் பல, வெளிநாடுகளின் பல வாடிக்கையாளர் சேவைகளை இங்கிருந்தே இணையம் மூலம் விடிய விடிய நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன. அந்த அத்தனை வேலைகளின் மீதும் அடிக்கப்பட்ட வலுவான ஆணி இந்த புதிய அறிவிப்புகள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!