‘சர்வதேச நாடுகள் எல்லாம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அச்சத்துடன் பார்க்கின்றன. அவரோடு கவனமாகவே கொடுக்கல் வாங்கல் செய்கின்றன. நமது நாடும் செழிப்புற்று வருகிறது. இன்று உலக அரங்கில் உலாவி வரும் அதிகாராதிபதிகளில் எமது தலைவரும் ஒருவர்.’ என்று ஜனாதிபதி ரணிலின் ஆஸ்தான அல்லக்கைகளில் ஒருவரான வஜிர அபேவர்தன என்பவர் அண்மையில் தெரிவித்திருந்தார். இன்னும் சில ஆண்டுகளுக்கு ‘மீளவே முடியாது’ என்று பொருளாதார நிபுணர்களால் சத்தியம் செய்து கூறப்பட்ட தேசத்தில் ஜனாதிபதி ரணிலின் ஆட்சி நூறாவது நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. உண்மையில் அடிப்பொடிகளும் எடுபிடிகளும் சொல்வது போல அத்தனை சீக்கிரத்தில் எல்லாமே தலைகீழாகி ஷங்கர் பட க்ளைமேக்ஸ் காட்சிகள் போல ஓவர் நைட்டில் அனைவரும் திருந்தி புகார்ப் பெட்டிகள் எல்லாம் காலியாகி நாடு ஸ்திரத்தன்மையடைந்து விட்டதா..?
இதைப் படித்தீர்களா?
சிறிது காலமாகக் காஷ்மீரில் பெரிய தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்கள் இல்லாமல் இருந்தன. மீண்டும் இப்போது தலையெடுக்கத் தொடங்கியிருப்பது கவலையளிக்கிறது...
மேல் சட்டையில் ஒன்றுக்கு மேல் பாக்கெட் இருந்தாலே, என்னடா இவன் இளந்தாரிப் பயல மாதிரி சட்டைப் பூரா பாக்கெட் வச்சுக்கிட்டு சுத்தறான் என்பார்கள். அதுவே...
Add Comment