Home » தணியுமா இந்த சாகச மோகம்?
சமூகம்

தணியுமா இந்த சாகச மோகம்?

பரபரப்பு மிக்க நியூயார்க் நகரில் வேகமாக ஓடும் சுரங்கப்பாதை ரயிலின் மேல் நின்றுகொண்டே பயணிக்கும் இளைஞர்கள்,  மலைகளின் உச்சிகளில் ஆபத்தான செல்ஃபி எடுக்கும் சுற்றுலாப் பயணிகள், இந்தியாவில் வேகமாக ஓடும் புகைவண்டிகளின் கதவுகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்பவர்கள், நயாகரா நீர்வீழ்ச்சியை வென்றெடுக்க முயலும் சாகச வீரர்கள் – இவர்கள் அனைவரும் மரணத்தை நோக்கிச் செல்கிறோம் எனத் தெரிந்தும் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள்?

இந்தக் கேள்விக்கான விடை, நவீனத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியோடும் மனித உளவியலோடும் மிக நெருக்கமாகப் பின்னிப் பிணைந்திருக்கிறது.

2024இல் மட்டும் நியூயார்க்கில் பன்னிரண்டு பேர் சப்வே சர்ஃபிங் செய்யும்போது இறந்துள்ளனர். இது முந்தைய வருடத்தை விட இரண்டு மடங்கு எண்ணிக்கை. இறந்தவர்களில் பலர் பதின்ம வயதினர். அக்டோபர் 2025இல், புரூக்ளினில் இரண்டு பதின்ம வயது சிறுமிகள் ரயிலின் மேல் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!