Home » சூடான்: ஆப்பிரிக்காவின் காஸா?
உலகம்

சூடான்: ஆப்பிரிக்காவின் காஸா?

சர்வதேச மீட்புக் குழு ஒவ்வொரு ஆண்டும் ‘அவசரக்கால கண்காணிப்பு’ பட்டியல் ஒன்றை வெளியிடும். போர், பஞ்சம் உள்ளிட்ட அசாதாரணச் சூழல் நிலவும், மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் நாடுகளைக் கண்டடைந்து உதவுவது அதன் நோக்கம். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அப்பட்டியலில் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது சூடான். காரணம், அங்கே நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போர்.

மூன்று தசாப்தங்களுக்கும் மேல் (1989-2019) சூடானில் சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்தவர் ஒமர்-ஆல்-பஷீர். அவரைப் பதவியிலிருந்து இறக்குவதற்காக இணைந்து பணியாற்றியவர்கள் ராணுவம் (SAF) மற்றும் துணை ராணுவப் பிரிவின் (RSF) தலைவர்களான அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான், ஹம்தான் டகாலோ ஆகியோர். RSF என்பது 2000ஆம் ஆண்டு காலகாலத்தில் ஜான்ஜாவீட் என்று அறியப்பட்ட அரேபியக் கிளர்ச்சிக் குழு. அப்போதைய டார்ஃபுர் நகரக் கலவரத்தை அடக்க ஓமர்-ஆல்-பஷீர் வளர்த்து வைத்திருந்த குழு, இப்போது அது சூடானில் துணை ராணுவப்படையாக இருக்கிறது.

ஒமர்-அல்-பாஷ்ரின் ஆட்சி கவிழ்ப்புக்குப் பிறகு, சூடானில் மக்களாட்சி கொண்டு வரப்படும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அங்கே ஆட்சி ராணுவத்தின் வசம் சென்றது. இரு தளபதிகளுக்கும் இடையே அதிகார மோதல் தொடங்கியது. முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய அதிகாரம் யார் வசம் இருக்கவேண்டும் என்கிற குழப்பம், ஒரு கட்டத்தில் இருதரப்பினருக்கு இடையேயான தாக்குதலாக வளர்ந்து, முழுப் போராக மாறியது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!