டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திவந்த போராட்டம், மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ததை அடுத்து முடிவுக்கு வந்தது.
இவ்வாண்டு நடைபெற்ற நீட் நுழைவுத்தேர்வின் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்சி தேர்வு ஆன்லைன் விடைத்தாள் திருத்தத்தில் நிகழ்ந்த குளறுபடிகள் போன்றவற்றைக் கண்டித்தும், அதற்குக் காரணமானவர்களைப் பதவிநீக்கக் கோரியும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் டெல்லி ஜந்தர்மந்தரில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு ஆதரவு தெரிவித்து லடாக்கைச் சேர்ந்த கல்விச் சீர்திருத்தவாதியும், சமூகச் செயல்பாட்டாளருமான சோனம் வாங்சுக் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
ஆனால் அவரது உண்ணாவிரதம் தொடங்கி இருபது நாட்கள் வரை மத்திய அரசிடமிருந்து எந்தவிதமான எதிர்வினைகளும் வரவில்லை. இந்த இளைஞர்கள் போராட்டத்துக்குப் பொதுமக்கள் மத்தியில் கணிசமான ஆதரவு இருந்தபோதிலும், போராட்டக் களத்தில் இளைஞர்கள் அதிகளவில் குவியத் தொடங்கியபோதிலும் அரசு பொருட்படுத்தாமலேயே இருந்துவந்தது.
















இவ்வார நம் குரல் ஆட்டம் கண்ட அதிகாரம் அனைத்து கோணங்களிலும் அலசி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது. போராட்டத்தின் நியாயத்தையும்
மற்ற எதிர்கட்சிகள் ஆதரவு கொடுத்தாலும் அவர்களுடன் தங்களை
இணைத்துக் கொள்ளாததையும் எடுத்துக்காட்டியிருக்கிறது.
முக்கியமாக நாட்டில் எந்த கட்சியும் மூத்தவர்கள் இளைஞர்களை
முன்னிருத்தாமல் அவர்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்
மனநிலை முக்கிய காரணம் என்பதை சரியாக சுட்டிக்காட்டியிருக்கிறது
நம் குரல். தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தலே அதற்கு உதாரணம்.
வாய்ப்பு கொடுத்தால்தான் திறமை வெளிப்படும் என்பதை மூத்தவர்கள்
உணர வேண்டும். இல்லையெனில் அவர்கள் தனியே உருவாக்கிக் கொள்வார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் இதெல்லாம்.
பாபநாசம் நடராஜன்