தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்களில் மட்டுமே இன்னும் உயிரோடிருக்கும் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை, கீழைநாடுகளின் கலாசாரமாக இருந்தது. மனிதர்களின் தனித்துவம் பெரிதும் போற்றப்படுவது மேலைநாடுகளின் பழக்கமாக இருந்தது.
எப்போதுமே அமெரிக்காவில் பெற்றோர்கள் பள்ளி இறுதி வரை தங்கள் குழந்தைகளின் படிப்பு, விளையாட்டு போன்றவற்றில் மிகவும் ஈடுபாடு காட்டுவார்கள். அவர்கள் வளர்ந்து கல்லூரிக்குச் சென்றாலும் பணி , திருமணம் என எல்லாவற்றிலும் உதவியாகவும், அதேநேரம் தனிமனித எல்லைக் கோட்டைத் தாண்டாமல் இருப்பதே வழக்கம்.
பள்ளியில் படிக்கும் போதே, எத்தனை பெரிய செல்வந்தர் வீட்டுப் பிள்ளையானாலும், தன் கைச்செலவுக்காக வேலை பார்க்கத் தொடங்கும் வழக்கம் அமெரிக்காவில் உண்டு. புல்வெளியைச் சீர்படுத்துவது, பனி அள்ளுவது போன்ற சின்னச் சின்ன வேலைகள், கோடைக் காலங்களில் கல்விக்கும் உதவுகிற மாதிரியான வேலைகள் எனச் செய்யும் பழக்கம் மாணவர்களிடையே உண்டு.
















Add Comment