11. வாவி
வெய்யோனின் காங்கை நிகர்த்த மாசறு நிலையை அவன் சிந்தையில் கண்டேன். அவனிடம் சூழ்ச்சி இல்லை. கள்ளத்தனமில்லை. இதற்குப் பிறகு அது, அதற்குப் பிறகு இதுவென்ற கணக்குகள் இல்லை. தனது பிறப்பு, வளர்ப்பு, வாழும் சூழல் சார்ந்த அச்சம் இருந்தது. தனது தாய் தந்தையருக்குத் தன்னால் ஒரு துன்பம் வந்துவிடக் கூடாதென்ற எண்ணம் இருந்தது.
மகனே, உன் எண்ணமும் அதன் விபரீதமும் எனக்குக் கவலை தருகின்றன. சற்று சிந்தித்துப் பார். ஊரார் ஒதுக்கி வைத்துள்ள ஒரு பெரும்பாவியுடன் உனக்குத் தொடர்பிருப்பது தெரிய வந்தால், அவர்கள் விநாடிப் பொழுதும் தாமதிக்காமல் நம்மை ஒதுக்கி வைப்பார்கள். சிவப்பணியினின்றும் என்னை விலக்கி நிறுத்துவார்கள். மனித குலத்துக்கு முப்பொழுதும் உண்ணக் கிடைப்பது சாதம் மட்டுமே. ஈசன் நமக்கு அதைப் பிரசாதமாக்கித் தருகிறான். அந்நன்றி உன் நெஞ்சில் நிறைந்திருக்க வேண்டாமா? அதனைக் கொல்லத் துணிவாயா?
கட்டுப்படுத்தவியலாத கண்ணீருடன் தன் தந்தை கேட்டதைச் சொல் மாற்றாமல் அவன் சார்வாகனிடம் தெரிவித்திருந்தான்.
அதையும் மீறி நான் ஏன் உங்களை நாடி வந்தேன் தெரியுமா?











Add Comment