தான் இரான் அதிபராகப் பதவி வகித்த காலத்தில் இஸ்ரேலை உலக வரைபடத்தில் இருந்து அகற்றப் போவதாகச் சவால்விட்ட அஹமத் மொஹம்மத் நிஜாத், ஓய்வுக் காலத்தில் இஸ்ரேலிய உளவு அமைப்பான மொஸாட்டுடன் சேர்ந்து பணியாற்றியதால் இரானியப் புரட்சிகரக் காவல்படையால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை ஒரு பரபரப்புக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறது.
இதுவரை இதுபற்றி இரானிய ஊடகங்கள் வாய்திறக்கவில்லை. இந்தச் செய்தி மட்டும் உண்மை என்றால், இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய ஆச்சர்யக் குறியாக இதுவாகத்தான் இருக்க முடியும்.
2005ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை இரானை ஆண்ட முன்னாள் அதிபர் அஹமத் மொஹம்மத் நிஜாத், இரான் அணு ஆயுத வல்லரசாக மிளிர வேண்டும் என்று தீவிர விருப்பம் கொண்டு உழைத்தவர். இன்றைய இரானின் அணுச் செறிவூட்டத்துக்கான உறுதியான அஸ்திவாரத்தைப் போட்டவர்களில் ஒருவர்.
















Add Comment