Home » டார்க் வெப்பில் அணு உலை ரகசியங்கள்
இந்தியா

டார்க் வெப்பில் அணு உலை ரகசியங்கள்

இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான கூடங்குளத்தில் அண்மையில் நேர்ந்த தகவல்கள் திருட்டு, நாட்டின் முக்கியக் கட்டமைப்புகளின் டிஜிட்டல் அரண் குறித்த கவலையையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

யுரேனியத்தைப் பிளந்து, அதிலிருந்து வெளியாகும் வெப்பத்தில் நீராவியை உண்டாக்கி மின்சாரம் தயாரிக்கும் இடமே அணுமின் நிலையம். கதிரியக்கப் பொருட்கள் வெளியிடும் அபாயகரமான கதிர்வீச்சு மனிதர்களுக்கும் சூழலுக்கும் பெரும் தீங்கை விளைவிக்கக்கூடியது என்பதால், அவை அணுமின் நிலையத்தில் மிகவும் கவனமாகக் கையாளப்படுகின்றன.

அணுமின் நிலையங்களின் கட்டுப்பாட்டு அமைப்புகளும், கதிரியக்கப் பொருட்கள் தொடர்பான செயல்பாடுகளும் மிகவும் கடுமையான இணையப் பாதுகாப்பு நடைமுறைகளின் கீழ் இயங்குகின்றன. இந்தியாவில் தற்போது தாராப்பூர், கல்பாக்கம், நரோரா உள்ளிட்ட ஏழு இடங்களில் அணுமின் நிலையங்கள் இயங்கி வருகின்றன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!