நன்றாகச் சாப்பிடுவதற்கு நமக்கு நன்றாகச் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சமையலின் அடிப்படை தெரிந்திருக்க வேண்டும். எதை எதோடு எவ்வளவு சேர்த்தால் குறிப்பிட்ட ருசி வரும் என்ற புரிதல் வேண்டும். அதற்காகவெல்லாம் அதிகச் சிரமப்பட தேவையில்லை. தொடர்ந்து ருசித்துச் சாப்பிட்டு வந்தாலே போதும்.
சாப்பாட்டின் தரம் கூடுவதற்குப் பல காரணிகள் இருந்தாலும் முதல் முக்கியக் காரணம் சமையலுக்கு நாம் உபயோகிக்கும் மூலப்பொருட்களின் தரம்.
சமையல் செய்வதற்கு என்னென்ன வேண்டும் என்று பட்டியல் போடும்போது முதல் மூன்று இடத்தைப் பிடிப்பது உப்பு, புளி, மிளகாய்தான். அதிலும் முதல் இடம் என்றென்றும் உப்பிற்குத் தான். சுவையிலும் முதன்மையான சுவை உப்புச் சுவையே.
Add Comment