மூன்றாவது முறையாகப் பிரதமர் பதவி ஏற்றுள்ளார் மோடி. செங்கோலை ஏந்திய கைகள் அரசியல் சாசனத்தை வணங்கின. “எண்ணிக்கைகள் அல்ல, ஒருமித்த கருத்தே ஆட்சியை நடத்தத் தேவை” என்று பேசினார். கடந்த பத்தாண்டுகளில் காணாத பிரதமரை நாடு தற்போது காண்கிறது. இந்த மிதவாத முகம் எத்தனை நாள் தொடரும் என்பது விடை தெரியாத கேள்வி...
Tag - ஊழல்
தேர்தல் பத்திரங்கள் விவகாரம் பரவலான பேசுபொருளாக இருக்கிறது. உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தில் காட்டிய கடுமை மிக முக்கியமான காரணம். இந்த மாபெரும் ஊழல் பொதுமக்களுக்கு நேரடியான பாதிப்பை ஏற்படுத்தாததால் இந்த விவகாரம் தன்னிச்சையாக மக்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்துமா என்னும் கேள்வி எழுகிறது...
மூன்று மில்லியன் டாலர் லஞ்சப் பணம். கையும் பணமுமாகக் கைதானது – உக்ரைனின் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, சீவலொத் கன்யாஸிவ். நீதிமன்றத்திற்கு உள்ளேயே அலுவலகம் ஒன்றை வைத்திருக்கிறார். நாடு முழுவதுமிருந்து வந்து குவியும் லஞ்சப்பணத்தை, முறையே கணக்கு வைத்துக் கொள்வதற்கு. லஞ்சம் வாங்குவதை ஆதாரத்தோடு...
ஊழலும் மதவாதமுமே ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் நமது அரசியல்வாதிகளின் பேசுபொருளாக இருக்கும். இரண்டும் முக்கியமான பிரச்னைகள் என்பதிலோ, இரண்டுமே ஒழிக்கப்பட வேண்டியவை என்பதிலோ நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இவை இரண்டுமே இல்லாமல் போகும் நாள் கண்ணுக்கெட்டும் தொலைவில் இல்லை என்பதுதான் யதார்த்தம்...
‘நான் இந்த நாட்டு மக்களுக்காக வாழ்கிறேன். இந்த நாட்டுக்காகவே எனது வாழ்க்கையை அர்ப்பணம் செய்திருக்கிறேன். மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காகவே இங்கு வந்திருக்கிறேன். ஆகவே, உங்கள் அனைவரையும் எதிர்கொள்ளும் வைராக்கியம் எனக்கு இருக்கிறது’ என குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும்...