“உங்களோட விண்டோஸ் ஒரிஜினலா?” இந்தக் கேள்வியை நூறு பேரிடம் கேளுங்கள். நான்கு பேர் ஆம் என்பார்கள். பிற பதில்கள், “தெரியாது”, “அதனால என்ன”, “இல்லை”, “அப்டி ஒண்ணு இருக்கா சார்?”. திருட்டு சி.டி போலத் திருட்டு சாப்ட்வேர்களும் நம்மிடையே பரவலாகியுள்ளன. இதனால் விளையும் பெரும் சிக்கல்களை யாரும் அறிவதில்லை;...
Tag - கணினி
‘சோபியா’ இளஞ்சிவப்பு வர்ணச் சேலை கட்டியிருந்தாள். கல்கத்தா நகரத்துக் கல்லூரி மேடையொன்றில் ஆரத்தி எடுக்கப்பட்டு அமோகமாக வரவேற்கப்படுகிறாள். அவளது முகம் மகழ்ச்சியில் பிரகாசிக்கிறது. கல்லூரியின் மாணவர்களைப் பார்த்து, “உங்களது முகங்களில் நம்பிக்கை தெரிகிறது! நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்”...
இது இன்டர்நெட் காலம். இன்டர்நெட் இணைப்பின் வேகம்தான் நமது அன்றாடச் சுறுசுறுப்பையே நிர்ணயிக்கிறது. தகவல்களைத் தேட இன்டர்நெட், சேவைகளைப் பெற இன்டர்நெட். இதனால் இன்டர்நெட் மீதான நமது சார்பு சமீப காலங்களில் மிகவும் அதிகரித்திருக்கிறது. இந்தச் சூழலில் சைபர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு...
முப்பதாண்டுகளுக்கு முன்பு கணினி மென்பொருள் நிறுவனத்தைத் துவங்கியவர் ‘காம்கேர்’ புவனேஸ்வரி. தன் நிறுவனப் பெயரான காம்கேர் சாஃப்ட்வேர் என்பதையே தன்னுடைய அடையாளமாகவும் மாற்றிக் கொண்டவர். கணினி மென்பொருள் தயாரிப்பு, வலைத்தளங்கள் உருவாக்கம் மற்றும் நிர்வாகம், மல்ட்டிமீடியா அனிமேஷன், பதிப்பகம்...
ஓப்பன் ஏஐ நிறுவனத்தில் எட்டு லட்சம் கோடிகளை முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது மைக்ரோசாப்ட். இதற்கு முன்பே இந்நிறுவனத்தில் கொஞ்சம் முதலீடு செய்திருக்கிறது. ஓப்பன் ஏஐ வெளியிட்ட சாட் ஜிபிடிக்குக் கிடைத்த பிரபலத்துக்குப் பிறகு முதலீடு அதிகரித்திருக்கிறது. முதலீடு மட்டுமல்ல, தங்கள் பிங் தேடுபொறியுடன்...
கணினி உலகம் நாளுக்கு நாள் நான் வளர்கிறேனே மம்மி என்று வளர்ந்துகொண்டேதான் இருக்கும். அதற்கு ஓய்வு நாளெல்லாம் கிடையாது. இங்கே ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் ஒரு பெரிய மாறுதல் வரும். கடந்த இரண்டாண்டுகளில் தாமதமான விஷயங்களை இந்தாண்டிலிருந்து (2023) எதிர்பார்கலாம். அவை யாவை? 5-ஜி இந்தாண்டு சகஜமாகிவிடப் போகிற...
பொதுவாக விண்டோஸ் கணினியில் கோப்புகளை அழித்தால் (டெலீட்), சமர்த்தாக அவை ரீசைக்கிள் பின் (Recycle Bin) என்னும் சிறப்பு கோப்புறையில் (போல்டர்) போய் உட்கார்ந்துவிடும். தவறுதலாக அழித்திருந்தால், அங்கே போய்ச் சுலபமாக மீட்டெடுக்கலாம். ஆனால் இந்த ரீசைக்கிள் பின் வசதி, யு-எஸ்-பி பென்-டிரைவ்களுக்கு...
இன்று பெரும்பாலான கணினிகளில் இருக்கும் இயங்குதளம் மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10. அதில் நமக்கு அதிகம் தெரியாமல் பல வசதிகள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம். செல்பேசியை இணைக்கவும் : குறுஞ்செய்திகளைப் பார்க்க, தொலைபேசி அழைப்புகளைப் பேச, காமிராவில் எடுத்த படங்களைப் பார்க்க என்று ஒரு நாளில் பல...
காலை விடியும் போது நமது அனைவரின் கைகளில் இருந்தும் திறன்பேசிகள் பிடுங்கப்பட்டு விட்டால் என்ன ஆவோம்? நினைத்தாலே கலவரமாக இருக்கிறது இல்லையா? இதே கதைதான் கைபேசிகளில் இருக்கும் சமூக ஊடகச் செயலிகள் போன்றவற்றை அழித்து விட்டாலும். இவை இந்தளவு முக்கியத்துவம் அடையக் காரணம், அன்றாட வாழ்வில் நமக்கு அவை...
கணினி ஓர் அத்தியாவசியப் பொருள். நமக்கு நம் உடம்பு எப்படியோ அப்படி நம் வாழ்க்கைக்குக் கணினி. ஆனால் நம்மைப் பராமரிப்பது போல நம் கம்ப்யூட்டர்களை நாம் பராமரிக்கிறோமா? மேலுக்குப் போட்டு வைக்கும் தூசு தும்புகள், அழுக்கு-கறைகள் ஒரு பக்கம் என்றால் உள்ளே குவித்து வைக்கும் குப்பைகள் மறுபக்கம். அம்மாதிரி...