20. உயிர்த் தீயினிலே வளர் சோதி யோசித்துப் பார்த்தால், இரண்டு விஷயங்கள் சார்ந்த வியப்பு உலகமுள்ள வரை தீரவே தீராது. முதலாவது சுவாசிப்பது. இரண்டாவது உணவு தேடுவது. பசி என்ற உணர்ச்சி இருக்கும்வரைதான் உயிர்கள் எதையாவது செய்துகொண்டிருக்கும். அது இல்லை என்றாகிவிட்டால் ஒன்றும் செய்யவேண்டிய அவசியம் இருக்காது...
Tag - இயற்கை
வயநாடு. ஜூலை 30 , 2024 . நள்ளிரவைக் கடந்தும் மேகங்கள் அழுது வடிந்து கொண்டிருந்தன. குளிரும் மழையும் அம்மக்களுக்குப் புதிதல்ல என்றாலும், அன்றைய பேய்மழை ஏற்படுத்தப் போகிற நாசத்தை, அப்போது ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கேரளத்தில் குறுகிய தூரத்திற்குப் பாயும் ஆறுகள்...
துபாய் பல நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு சதுப்பு நிலமாக இருந்தது. பின் மீன் பிடி கிராமமாக மாறியது. காய்ந்த வெயிலையும் மணலையும் சும்மா விட்டு வைக்காமல் சுற்றுலாத் தலமாக மாற்றினார்கள் ஷேக்மார்கள். இருப்பதை வைத்து எல்லா விஷயத்திலும் உச்சம் தொடுவதில் ஐக்கிய அமீரக அரசர்கள் கில்லாடிகள். பாலைவனமும் கடலும்...
பிலிப் ஐலண்ட் என அழைக்கப்படும் தீவு ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் உள்ளது. இது மெல்பேர்ன் நகரிலிருந்து 125 கிலோமீட்டர்கள் தென்கிழக்குப் பகுதியில் உள்ளது. தீவான போதிலும் இதனைக் காரில் சென்றடையலாம். இத்தீவினை இணைத்துக் கொள்ள ஒரு பாலம் உள்ளது. இத்தீவில் ஒரு காட்சிக்கான சென்டர் உள்ளது. நாம்...
நீலக் கொடி காட்டினால் என்ன பொருள்..? ‘நம்பி வரலாம்’ என்று அர்த்தம். அண்மையில் இலங்கையின் பன்னிரண்டு பிரதான கடற்கரைகள் நீலக் கொடி அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டுள்ளன. இந்தக் கொடி, சுற்றுலாத் தலங்களுக்கு, குறிப்பாக கடற்கரையோரங்களுக்குக் கிடைக்கும் சர்வதேச உத்தரவாதச் சின்னமாகும். சர்வதேசப் பயணிகள்...
சந்திரயான்-3 திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன் இஸ்ரோ சந்தித்த பெருஞ்சிக்கல் ஒன்றை நமது நாமக்கல் மாவட்ட மண் தீர்த்து வைத்தது என்பதை அறிவீர்களா? பெரும்பான்மையோர் கவனிக்கத் தவறிய, நாமக்கல் மாவட்டத்துக்காரர்கள் கெத்துக் காட்ட வேண்டிய விஷயம் அது. அப்படி அவர்கள் மார்தட்டிக் கொள்ளும்படியாக என்ன நடந்தது...
இமாசல பிரதேசத்தில் ஓரிடம். ஏதோ ஒரு தொகுதி, ஒரு வார்டு. தொடர்ந்து மழை பெய்துகொண்டிருப்பதில் கவலையடைந்த கவுன்சிலர் பிட்டு பண்ணா, தனது வார்டுக்கு உட்பட்ட வீடுகளுக்குச் சென்று ஆய்வு செய்தார். பல வீடுகள் மழையில் சேதமடைந்திருந்தன. ஏராளமான விரிசல்கள். உடனே ரிப்பேர் செய்யுங்கள்; இல்லாவிட்டால் பிரச்னையாகும்...
2022 ஜூலை மாதத்தில் இங்கிலாந்தில் வெப்ப நிலை முதல் தடவையாக 40°C க்கு மேலாகச் சென்று இதுவரை பதிவு செய்யப்பட்ட வெப்ப நிலைகளில் அதிகூடியதாக வரலாறு படைத்ததாக ஒரு கட்டுரை மெட்ராஸ் பேப்பரில் வெளியிட்டோம். இந்த ஆண்டு இதுவரை இங்கிலாந்தில் அந்தளவுக்கு வெப்பநிலை ஏறவில்லை. ஆனாலும் இவ்வாண்டு ஜூன் மாதம் சராசரி...
இந்த வருடம் வெயிலைப் போலவே மழையும் வெளுத்து வாங்கும் என்கிறார்கள். ஏற்கெனவே இந்தியாவின் பல வட மாநிலங்கள் மழை வெள்ளத்தில் தத்தளிக்க ஆரம்பித்துவிட்டன. காரணம் கேட்டால், பருவநிலை மாற்றம். அப்படி என்னதான் நடக்கிறது இயற்கைக்கு? எல்நினோ குறித்தும் தற்போதைய மழை, காலநிலை மாற்றம் குறித்தும் கேட்டறிய...
தமிழ்நாட்டில் கோடை கொளுத்தி எடுக்கிறது. இப்போதே வெளியில் தலை காட்ட முடியாத சூழல் நிலவுகிறது. வேலூர் போன்ற பிராந்தியங்களில் நூறு டிகிரியைத் தாண்டிப் பேயாட்டம் போடத் தொடங்கிவிட்டது. இந்நிலையில் இக்காலநிலைக்கு முற்றிலும் நேரெதிரானதொரு பருவநிலை நிலவும் சூழலில் வசிக்கும் நமது நியூ மெக்சிகோ நிருபர்...