‘திருப்பதி என்றால் லட்டு, பழனி என்றால் பஞ்சாமிர்தம், திருவையாறு என்றாலே அசோகா அல்வா… திருவையாறு ஆண்டவர் ஒரிஜினல் நெய் அல்வா கடை, எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை.’ என்று ஏற்ற இறக்கங்களுடன் பேசும் விளம்பரம் திருச்சி வானொலியில் அடிக்கடி வரும். அசோகா என்பது பாசிப்பருப்பை மூலமாக வைத்துச்...
Tag - உணவு
மதியம் அரைத்த மாவு புஸுபுஸுவெனப் பொங்கியிருந்தது. அன்று அரைத்த மாவில் சுடும் இட்லிக்கென்று தனித்த ருசியுண்டு. இரவுணவுக்கு இட்லியும், சாம்பாரும் என எளிதாக முடிவு செய்திருந்தேன். ‘இட்லி வேணாம்… எனக்குப் பூரிதான் சாப்பிடணும் போல இருக்கு…” என அன்று பார்த்து அடம்பிடித்தாள் மகள். “இவளுக்குன்னு ரெண்டு...
பொதுவாகச் சுற்றுலா சென்றோமென்றால் பின்னாளில் நினைத்து மகிழ ஆயிரம் நினைவுகள் சேகரமாகும். எனக்கு துருக்கிப் பயணம் அப்படித்தான் அமைந்தது. நகரத்தின் பழமை கண்களுக்கும் மனத்துக்கும் நிறைவைத் தந்தது. பல நூற்றாண்டுகளுக்கு முன் டமாஸ்கஸைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த உதுமானியர்கள்தான் அதற்குக் காரணம்...
‘இந்தப் பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிடக் கிடைச்சது’ என்ற பாடலைக் கேட்டுக்கொண்டே, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமதிஸ்ட் உணவகத்தின், குறிஞ்சித் திருவிழாவிற்குச் சென்றோம். மேற்குத் தொடர்ச்சி மலைவாழ் மக்களின் உணவு முறைகளை, நகர மக்களுக்கும் அறிமுகப்படுத்துவது இதன் நோக்கம். உணவின் வரலாற்றையும்...
பூரி, சப்பாத்தி எல்லாம் தாத்தாவுக்கு மூன்றாம் பட்சம்தான். சிற்றுண்டி என்றாலே இட்லியும் தோசையும்தான். இல்லையென்றால் உப்புமா. அவர் சிறுவயதாக இருக்கும்போது உணவில் கோதுமையின் அறிமுகமே கிடையாது. மேத்தி சப்பாத்தி, மூளி பராத்தா என விதவிதமாகச் செய்வார் அத்தாட்டி. ஆனாலும் தாத்தாவுக்கு ஏதாவது விசேஷமாக...
அரைத்து விட்ட சாம்பார், மைசூர் ரசம், கோஸ் பட்டாணிப் பொறியல், அப்பளம், பால் கொழுக்கட்டை என்று காலையில் விருந்து படைத்திருந்தார் அத்தாட்டி. “சாயந்திரம் எதுவும் செய்ய வேண்டாம் அத்தாட்டி. ராத்திரி பழம் மட்டும் போதும்.” என்று வீறாப்பாகச் சொல்லிவிட்டு மதியம் படுத்து விட்டோம். நிறைந்த வயிறு தந்த போதைத்...
விருந்தாளிகள் வந்தால் சமையலில் வடை பாயசம் நிச்சயம் இருக்கும். பாயசம் போல சிரமமில்லாமல் செய்யக்கூடிய இனிப்பு பிறிதொன்றில்லை. சிலர் கேசரி கிளறிப் போடுவர். அதற்கும் மேலே போய் எதற்கு வம்பு என்று கடையில் வாங்கி சபையில் வைத்து விடுவோரும் உண்டு. ஆனால் ஒருமுறை அத்தாட்டி வீட்டிற்குப் போனபோது பால்...
“இழையை உடைச்சா குகை மாதிரி ஓட்டை இருக்கணும். அதை வைச்சு உறிஞ்சி இழுத்தோம்னாக்க, தேனே மேல ஏறி வரனும்.” என பாட்டி ஆரம்பித்தால் “அதுனாலதான் அதுக்கு தேங்கொழல்னு பேரு வச்சிருக்காங்க…” என பிள்ளைகளெல்லாம் சேர்ந்து கோரஸாகப் பாடி முடிப்போம். ஒவ்வொரு தீபாவளிக்கும், விறகடுப்பில் பெரிய இரும்புச் சட்டியை...
“தினமும் காலைல ஐம்பது நூறு செலவழிச்சு டிபன் சாப்பிட முடியாது சார். ரெண்டு வடை, ஒரு மொச்சை. காலைல ஏழு மணிக்குச் சாப்பிட்டு வேலைக்குக் கிளம்பினா மதியம் வரை பசிக்காது. பசிச்சா இருக்கவே இருக்கு இன்னும் ரெண்டு வடை பதினோரு மணிக்கு. சாயங்காலம் வேலை முடிஞ்சு வீட்டுக்குப் போகும்போது ரெண்டு பஜ்ஜி. இல்ல...
“டெய்லி இட்லி, தோசை, இல்லன்னா உப்புமா. வீக்கெண்ட் வந்தா பூரி, சப்பாத்தி. போரடிக்குது அத்தாட்டி. ஏதாவது புதுசா டிரை பண்ணலாம்னா இவருக்கு, பசங்களுக்குப் பிடிக்குமான்னு யோசனையாயிருக்கு. கஷ்டப்பட்டு பண்ணி வேஸ்டாகிடுச்சுன்னா என்ன பண்றது?” ஊரிலிருந்து வந்திருந்த அத்தைப் பாட்டியிடம் புலம்பிக்...