கோவை டவுன் ஹால் பகுதியில் மாநகராட்சி அலுவலகத்தின் அருகில் உள்ள துருகாலால் ஊறுகாய்க் கடை 1930-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொண்ணுற்று நான்கு வயதாகும் இந்த ஊறுகாய்க் கடையை இரண்டாவது தலைமுறையைச் சேர்ந்த எழுபத்து நான்கு வயது ரமேஷ்லால் நடத்தி வருகிறார். இவருடைய குலத்தொழில் இனிப்புப் பண்டங்கள் தயாரிப்பது...
Tag - கோவை
ஒரு சாதாரண நாளில் கோயமுத்தூர் வடவள்ளியிலிருந்து ஈஷா யோகா மையத்தை முக்கால் மணி நேரத்தில் அடைந்துவிடலாம். ஆனால், மகா சிவராத்திரி அன்று முழுதாக ஆறு மணி நேரம் ஆனது. முன்னும் பின்னும் பல மைல் தூரத்திற்கு இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள். நூற்றுக்கணக்கில் பேருந்துகளும் அணிவகுத்திருக்க...
நூறாண்டுகளாக கோவையின் அடையாளங்களில் ஒன்றாக இருந்த டிலைட் திரையரங்கம் இடிக்கப்பட்டு வருகிறது. அந்த இடத்தில் வணிக வளாகம் கட்டப் போவதாக தெரிவித்திருக்கிறது திரையரங்க நிர்வாகம். சினிமாவை முதன்மையான பொழுதுபோக்காகக் கொண்டிருந்த, செல்போன் இல்லாத காலத்தில் வாழ்ந்தவர்கள் இச்செய்தியைக் கேட்டுத் தங்களோடு...
‘ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது’ என்பார்கள். அறிவு தனது கண்களைத் திறக்கும்போது, அறியாமையில் செய்யப்படும் தவறுகளும்,குற்றங்களும் நிறுத்தப்படுகின்றன அல்லது குறைக்கப்படுகின்றன. ஒருவர் தனது அறிவினை பெருக்கிக் கொள்வது மட்டுமே அவரின் முறையான வளர்ச்சியாக கருதப்படும். அந்த...
கோவைவாசிகளுக்குத் தியாகு புக் செண்டரைத் தெரியாமல் இருக்காது. அறுபத்து நான்கு வருடப் பாரம்பரியம். சுமார் எண்பதாயிரம் புத்தகங்கள். இவ்வளவு பிரம்மாண்டமானதொரு வாடகை நூல் நிலையம் வேறெங்கும் உண்டா என்பதே சந்தேகம். புகழ்பெற்ற இவ்வாடகை நூலகம் வரும் ஜூன் மாதத்துடன் மூடப்பட இருப்பதாக அதன் உரிமையாளர்...
கடந்த வாரம் வந்து சென்ற சிவராத்திரிக்குப் பத்து நாள் முன்னும் பின்னுமாக நாம் யாரைக் குறித்து அதிகம் பேசினோம் என்று சிந்தித்துப் பார்த்தால், விடை ஜக்கி வாசுதேவாக இருக்கும். நம்மால் மாற்ற இயலாத, ஏற்கவும் முடியாதவற்றை நகைத்துக் கடக்க இந்நாள்களில் பழகிக்கொண்டிருக்கிறோம். உண்மையில் நமது நகைப்போ...