உயரத்திற்குப்போன எல்லாமே என்றேனும் ஒரு நாள் கீழே வருவதும், கீழே உள்ளது மேலே போவதும் இயல்பு. இதனை ஒரு பொதுவிதி என்றுகூடச் சொல்லலாம். வியாபாரம் உலகமயமாக்கப்பட்ட பின்பு உயரும் விலைவாசிக்கு இந்த விதி பொருந்துவது இல்லை. குறிப்பாக, தங்கத்தின் விலையானது இந்த விதியினை அடித்துத் தூள் தூளாக்கிவிட்டு...
Tag - சமூகம்
அமெரிக்க குடியுரிமை மற்றும் கடவுச்சீட்டு அலுவலகம், நிரந்தரக் குடியுரிமை மற்றும் பணியாளர், மாணவர் கடவுச்சீட்டில் உள்ளோர் அனைவரும் தங்கள் சமூகவலைத்தள கணக்கு விவரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிறது. மேற்பார்வையிடுவது ஒன்றும் புதிய கலாசாரம் இல்லை. காவலர்கள் கண்காணிக்காதபோது வேகத்தடையை மீறாத...
மாவோரி. மிகப் புராதனமான இந்தப் பழங்குடி இனம் நியூசிலாந்தில் உள்ளதை நாம் அறிவோம். அதுவும் சென்ற வருடம் நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் மாவோரி இனத்தைச் சேர்ந்த இளம் பெண் எம்பி ஒருவர் ருத்ர தாண்டவம் ஆடிய (ஹக்கா நடனம்) விடியோ க்ளிப்பிங்கின் தொடர்ச்சியாக மட்டும். மீண்டும் நாம் மாவோரிகளைச் சிந்திப்பதற்காக...
ஓட்டுக்குப் பணம் வாங்காமல் ‘நேர்மையாக வாக்களிப்போம்’ என்னும் பிரசாரத்தை முன் வைத்து கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் கோவையிலிருந்து வேதாரண்யம் வரை நடைப்பயணம் மேற்கொண்டனர். இவர்களில் இருவர் ஆண்கள். நான்கு பேர் பெண்கள். பதினெட்டு நாள்களில் நாநூறு கிலோமீட்டர்கள் நடைப்பயணம் செய்துள்ளார்கள்...
விவாகரத்தான பெண்களைத் தலைமேல் வைத்துக் கூத்தாட ஒரு நாடு உள்ளது. வட மேற்கு ஆப்ரிக்காவில் இருக்கும் மொரிட்டானியா! இங்கே விவாகரத்தான பெண்களுக்கென்றே பிரத்தியேகமாக ஒரு சந்தை இருக்கிறது. அதற்குப் பெயரே டிவோர்ஸ் வுமென் மார்க்கெட். சஹாரா பலைவனத்தின் மடியில் மொரிட்டானியா உள்ளது. தொண்ணூறு சதவீதம் பாலைவனம்...
‘நாடு வளர்ச்சியடைய வேண்டுமென்றால் வாரத்தில் தொண்ணூறு மணி நேரம் வேலை செய்ய வேண்டும். எனக்கு உங்களையெல்லாம் ஞாயிற்றுக் கிழமை வேலை பார்க்க வைக்க முடியவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது. நான் எல்லா ஞாயிற்றுக் கிழமையும் வேலை பார்க்கிறேன். வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்வது? எவ்வளவு நேரம்...
இனிவரும் தலைமுறை மூன்றரை நாள்கள்தான் வேலை செய்யப்போகிறது எனச் சொல்லியிருக்கிறார் ஜேமி டைமன். அமெரிக்கப் பன்னாட்டு நிதிச் சேவை ஜேபி மோர்கனின் தலைவராயிற்றே இவர். சரியாகத்தான் கணித்திருப்பார் என நம்பலாம். அவருடைய நிறுவனத்திலேயே இப்போது பெரும்பாலும் ஜெனரேடிவ் ஏஐ எனப்படும் செய்யறிவுத் தொழில்நுட்பத்தைப்...
நவம்பர் 11ஆம் தேதி உலகம் முழுவதும் உலக ஒற்றையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. காதலர் தினம், காதலைத் தெரிவிக்கும் தினம், ரோஜா தினம், தேசியத் தம்பதிகள் தினம் எல்லாம் எல்லோருக்கும் தெரியும். அது என்ன உலக ஒற்றையர் தினம்? ஒற்றையர் தினம் சீனாவில் தொடங்கப்பட்டது. ஒற்றையர் என்றால் 90’s கிட்ஸ் என்று...
தேடிக் கண்டடைதல் என்பது ஆதிமனிதன் காலத்திலிருந்தே மானுடத்தின் அடிப்படை இச்சை. ஒவ்வொன்றாகத் தேடித் தேடித்தான் அது தன் பரிணாமத்தைப் புதுப்பித்துக்கொண்டது. தேடிய அனைத்தையும் அடைந்துவிட்ட பிறகும், தேடுவதற்கு ஏதுமில்லையென்றாலும், புதிய தேடல்களை உருவாக்கிக் கொள்கிறான் நவீன மனிதன். ஏழு கடல் ஏழு மலை...
படிப்பிலும், பணியிலும் முதலிடம் பிடித்த அன்னா செபாஸ்டியன், இறப்பிலும் முந்திக் கொண்டுள்ளார். இருபத்தாறு வயதில் மாரடைப்பு ஏற்பட்டு இறக்கும் அளவுக்கு அவரது பணிச் சூழல் இருந்துள்ளது. வேலைக்குச் சேர்ந்து நான்கு மாதங்களே ஆன அன்னாவிடம் விடிய, விடிய வேலை வாங்கிய அலுவலக ஊழியர்கள் யாரும், அவரது இறுதிச்...