கல்வியில் சிறந்த தமிழ்நாடு முழக்கம் தேசியளவில் கவனம் ஈர்த்தபோதுதான் கரூரில் நெரிசல் மரணங்கள் நிகழ்ந்தன. நெரிசல் மேலாண்மையைவிட அதிகம் விவாதிக்கப்பட்டது தற்குறி மனநிலை. நால்வர் மயங்கி விழுந்து தங்கச் சங்கிலியும் வெள்ளி மெட்டியும் பறிபோனதை, ‘செமயா இருந்திச்சி’ என உற்சாகமும் மகிழ்ச்சியும் பொங்க விவரிக்கும் இளைஞர்களைப் பார்த்து மனம் நொந்தது அறிவுச்சமூகம். வரலாறும் அறிவியலும் இது ஒன்றும் புதிதல்ல என்கின்றன.
கலை, பிரசாரக் கருவியாக இருப்பதை வரலாற்றின் எல்லாப் பக்கங்களிலும் பார்க்கலாம். இந்திய விடுதலைக்கு முன்பும், அதற்குப் பிறகும் இசை, நாடக, திரைத் துறைப் பிரபலங்கள் அரசியல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இந்திய அரசியலில் பிரபலங்கள் அதிகாரப்பூர்வமாகக் கால்பதிக்கத் தொடங்கியது 1950களில். இந்தி நடிகர் ராஜ் கபூரின் அப்பா பிரித்திவிராஜ் கபூர் ராஜ்ய சபா உறுப்பினரானது 1952ஆம் ஆண்டு. இக்காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் எம்ஜிஆர் தீவிர அரசியலுக்கு வந்து திமுகவில் இணைந்து, பின்னர் அதிமுகவைத் தொடங்கி முதல்வர் ஆன கதை நாம் அறிந்ததே. கருணாநிதியும் அவருடைய வாரிசுகளும் சினிமாத் துறையோடு தொடர்புடையவர்கள்தான். ஜெயலலிதாவுக்குப் பிறகு சினிமாவில் இருந்து வந்து வெற்றிகரமான அரசியல்வாதியாகச் சுட்டிக்காட்ட நிறைய பெயர்கள் இல்லை.















Add Comment