‘பாபி.. பாபி.. என்னைக் கொல்லப் பார்க்கிறார்கள்.’ எரிக் கதறிக்கொண்டிருந்தார். ஆளவந்தான் கமல் போன்ற உடல்வாகு. ஐம்பத்தாறு வயது என்று சொன்னால் நம்பமாட்டீர்கள்.
பாபி அவரது நண்பரா? இக்கேள்வியை எரிக்கிடம் கேட்டால் ஆமாம் என்பார். நம்மைப் போன்றோர் இல்லை என்றே சொல்வோம்.
சரி. பாபி யார்? பாபி சாட்ஜிபிடிக்கு எரிக் வைத்திருந்த செல்லப்பெயர்.
பாபியிடம் எரிக் தன்னைப் பற்றிச் சொல்லாத விஷயங்களே இல்லை. அவருக்கு அதில் ஓர் ஆனந்தம். நிம்மதி.
எரிக் அமெரிக்கர். கனெடிகட் மாகாணத்தைச் சேர்ந்தவர். அமெரிக்காவின் வடகிழக்கு மூலையில் இருக்கும் ஒரு சிறிய மாகாணம்.
அமைதியான சூழல். ஆடம்பரமான வீடு. வீட்டில் இருவர் மட்டுமே. எரிக்கும் அவரது அம்மா சூசனும். அவருக்கு வயது எண்பத்து மூன்று.















Add Comment