Home » சமூகம் » Page 2

Tag - சமூகம்

சமூகம்

கண்ணதாசனின் காரும் எடிசனின் கேமராவும்!

“பள்ளியில் படிக்கும்போது அப்பாவின் இரண்டு சக்கர வண்டியில் ஏறி ஊரைச் சுற்றி வந்த ஞாபகம் இருந்தது. வளர்ந்தபின் அந்த வண்டியைத் தேடித் போய் வாங்கி வந்தேன். என்னைப் பொறுத்தவரை அது வெறும் உலோகமல்ல. எனது நினைவுகள். எனது பால்யம். எனது தாத்தா உபயோகப் படுத்திய 1955 எஸ்டேட் ஸ்டாண்டர்ட் கம்பெனியின் கார்...

Read More
சமூகம்

நிறம் மாறும் திருமணங்கள்

“இப்போது சில பெரிய குடும்பங்களில் வெளிநாட்டிற்குச் சென்று திருமணங்களை நடத்தும் புதிய வழக்கம் உருவாகியிருக்கிறது. இது அவசியமா? ஏன் இந்தியாவிலேயே இத்திருமணங்களை நடத்தக் கூடாது? அப்படிச் செய்வதால் அதற்கேற்ற அமைப்புகளும் வசதிகளும் இங்கு வளருமல்லவா? திருமணத்திற்குத் தேவையான பொருட்களை இங்கேயே வாங்குவதால்...

Read More
சமூகம்

லட்டும் உருட்டும்

திருப்பதி. பெயரைக் கேட்டாலே ஏழுமலையானுக்கு இணையாக நம் அனைவரின் நினைவுக்கும் வருவது- லட்டு. பசுநெய், முந்திரி, ஏலக்காய், கல்கண்டு, பச்சைக் கற்பூரம் உள்ளிட்டவற்றை சரியான விகிதத்தில் கலந்து மணக்க மணக்கத் தயாரிக்கப்படும் திருப்பதி லட்டுக்கு நிகர் வேறொன்றில்லை. ஒரே தரத்தில், ஒரே அளவில், சுவை மாறாமல்...

Read More
சமூகம்

எல்லாம் மாயா!

தொல்பொருள் ஆய்வாளர் டாக்டர் இவான், மெக்சிகோவின் யுகடன் தீபகர்ப்பத்தில் புதைந்திருக்கும் புதிய மாயா நகரம் ஒன்றைக்  கண்டுபிடித்திருக்கிறார். இவர் இதைக் கண்டுபிடிக்க முப்பது ஆண்டுகள் செலவிட்டிருக்கிறார். 2013-ஆம் ஆண்டு அவரும் அவரது குழுவினரும் சேர்ந்து ஒரு நகரத்தைக் கண்டுபிடித்தனர். இது 8-ஆம்...

Read More
சமூகம்

தமிழ்நாட்டில் ஒரு திபெத்!

கடல் மட்டத்திலிருந்து மூவாயிரத்து முந்நூற்று நாற்பத்து ஐந்து அடிகள் உயரத்தில் அருவிகள், காப்பித் தோட்டங்கள் மற்றும் புலிகள் காப்பகப் பகுதியாக இருக்கும் அடர்ந்த காடுகளின் நடுவில் அமைந்திருக்கின்றன கிட்டத்தட்ட மூவாயிரத்து ஐந்நூறு திபெத்தியர்கள் வாழும் அந்த மலைக் கிராமங்கள். திபெத்தில் அல்ல. இங்கே...

Read More
சமூகம்

வீட்டிலிருந்தே ஏமாறுவது எப்படி?

‘வீட்டில் உட்கார்ந்தபடி சம்பாதிக்கலாம். உங்களிடம் அடிப்படை ஆங்கில அறிவும் ஒரு திறன்பேசியும் இருந்தால் போதும். எந்த முதலீடும் தேவையில்லை. வயதோ, கல்வித் தகுதியோ, இனமோ, இடமோ எதுவுமே தடை இல்லை. தினமும் சிலமணி நேரங்களை மட்டும் செலவிட்டு ரூபாய் ஆயிரம் முதல் ஐயாயிரம் வரை இலகுவாகப் பணம் ஈட்டலாம்.’ சில...

Read More
விளையாட்டு

ஹமிதா பானு: வெல்ல முடியாத வீராங்கனை

ஹமிதா பானு என்ற பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மல்யுத்த வீராங்கனை என்று சொன்னாலாவது நினைவுக்கு வருகிறாரா? அநேகமாக இராது. இந்த தேசம் முற்றிலுமாகப் புறக்கணித்த, நிராகரித்த, அவமானப்படுத்திய, படாத பாடு படுத்திய ஒரு பெரும் வீராங்கனை அவர். விளையாட்டுத் துறையே ஆண்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த...

Read More
சமூகம்

நாய் வளர்க்க எவ்வளவு சம்பாதிக்க வேண்டும்?

தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு என வளர்ந்துவரும் துறைகளின் பட்டியலில் சத்தமேயில்லாமல் சேர்ந்திருக்கிறது பெட் கேர் இண்டஸ்ட்ரி. அதாவது செல்லப் பிராணிகளின் பராமரிப்பிற்கான தயாரிப்புகளைக் கொண்டுதரும் நிறுவனங்கள். அதிகரித்து வரும் நாய் வளர்ப்பு இதற்கொரு முக்கியக் காரணம். அதிகமில்லை… இப்போது...

Read More
சமூகம்

காதலைக் கலைத்துப் போடுவது எப்படி?

96 போன்ற திரைப்படங்களைப் பார்த்து ரசிக்கிறோம். உண்மையில், பள்ளி மாணவர்களுக்கு வருகிற காதல், அவர்களது எதிர்காலத்தைக் கபளீகரம் செய்துவிடும் அபாயம் அதிகம். நமது இலங்கைச் செய்தியாளர் ரும்மான் ஒரு பள்ளி ஆசிரியை. அதுவல்ல சிறப்பு. மாணவர்களின் காதலை வலிக்காமல் சஸ்பெண்ட் செய்து வைக்கும் கலையில் அவர் வல்லவர்...

Read More
சமூகம்

ஒரு பேரழிவின் மிச்சங்கள்

அவர் யார் என்று தெரியாது. அவரது பெயர் தெரியாது. அவரது மொழி தெரியாது. அம்முதிய பெண்மணி தரையில் அமர்ந்து ஒரு கல்லைத் தொட்டுக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார். அக்காட்சியைப் பார்த்த எங்களால் அவரைக் கடந்து செல்ல முடியவில்லை. அம்முதியவர் அமர்ந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த இடம் துபாய் எக்ஸ்போ...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!