Home » நவீன சாப்ளின்கள்
சமூகம்

நவீன சாப்ளின்கள்

‘பரிதாபங்கள்’ யூடியூப் சேனலில் சில தினங்களுக்கு முன்பு ‘சொசைட்டி பாவங்கள்’ என்ற தலைப்பில் ஒரு காணொளியைப் பதிவிட்டிருந்தார்கள். ஜாதிய ஆணவக் கொலைகளைப் பகடி செய்தும், அதேசமயம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் அது எடுக்கப்பட்டிருந்தது. சமூக அக்கறையுடன் போடப்பட்ட காணொளி என்று ஒருசாரார் இதைப். பாராட்டி வருகின்றனர். குறிப்பிட்ட ஜாதியைத் தாக்கிப் பேசுவதாக உள்ளது என இவர்களுக்கு எதிராக வழக்குகளும் பதியப்பட்டு வருகின்றன.

இந்தக் காணொளியை இதுவரை அறுபத்தைந்து லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். வைரலாகி இருக்கும் இந்த வீடியோவின் பார்வையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

இந்த யூடியூப் சேனலை நடத்திவரும் சுதாகர் ஜெயராம் – கோபி அரவிந்த் ராஜா இருவரும் திருச்சியில் கல்லூரிக் காலம் முதலே நண்பர்கள். இன்றைய தேதிக்கு அறுபத்து மூன்று லட்சம் சந்தாதாரர்களைக் கொண்டிருக்கும் இவர்கள், தங்கள் பயணத்தைத் தொடங்கியது அவர்களது ஊரின் நாடக மேடைகளில். கல்லூரி நாள்களில் நகைச்சுவை நிகழ்ச்சிகள், நாடகங்களில் பங்கேற்று வந்த இவர்களுக்கு, படிப்பைத் தாண்டி சினிமாவின் மீது ஆர்வம் உண்டானது. வாய்ப்புகளுக்காகத் தங்கள் சொந்த ஊர்களை விட்டு சென்னைக்கு வரும் பல இளைஞர்களில் இருவராகத்தான் இவர்களும் இருந்தனர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!