'ஃபார்பிடன் சிட்டி' அரண்மனையின் பாரம்பரியச் சீனக் கட்டடக்கலையை முன்னிறுத்தி இது கட்டப்பட்டது. மஞ்சள் நிறக் கூரைகளும், வளைந்த முகப்புகளும் சீனாவை நினைவுபடுத்தும்.
Tag - நூல்வெளி நாட்டினர்
'இந்த இடத்துக்கு துவாரக் மொழியில் 'தஸிலி நஜர்' என்று பெயர். அதற்கு 'ஆறுகளின் பீடபூமி' என்று பொருள். இன்று அங்கே ஆறுகள் இல்லை. வறண்ட பள்ளத்தாக்குகள் மட்டுமே.
'பஜாவ்' கடலின் ஜிப்ஸிகள். ஃபிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மலேசியாவுக்கு இடைப்பட்ட கடல்பரப்பில் இவர்கள் வாழ்கிறார்கள். இவர்களுக்கு நிலம் என்பது வேற்றுக் கிரகம்.
கின்னஸ் உலக சாதனைப் புத்தகமும், யுனெஸ்கோவும் இந்தப் பல்கலைக்கழகத்தை 'தொடர்ச்சியாக இயங்கி வரும் உலகின் பழைமையான கல்வி நிறுவனம்' என்று அங்கீகரித்துள்ளன.
ரோமானியர்கள் கார்த்தேஜை அழித்தபோது, அதன் அடையாளமே தெரியக்கூடாது என்பதற்காக அந்த நகரத்தின் மீது உப்பைப் தூவி, இனி எதுவும் முளைக்கக் கூடாது என்று சபித்தனர்.
ஆலிவ் மலை, கல்வாரி மலை என ஜெருசலேமின் நிலப்பரப்பை பாறை மலைகளில் மறு உருவாக்கம் செய்திருக்கிறார்கள். எத்தியோப்பியர்களின் முக்கியமான ஆன்மிகத் தலம் இதுதான்.
அலெக்சாண்டர், காசாவிலிருந்து ஐந்நூறு தாலந்து எடையுள்ள குங்கிலியத்தை லியோனிடாஸுக்கு அனுப்பி, ‘இனிமேல் கடவுள்களிடம் கஞ்சத்தனம் காட்டாதீர்கள்’ என்றார்.
மொத்த இலங்கையும் ஸ்தம்பித்துப் போனது. இது ஒரு நாள், இரண்டு நாள் காட்சியாக இருந்துவிட்டுப் போகவில்லை. மக்கள் தினந்தோறும் வாழப் போராட வேண்டியிருந்தது.
2017 ஆகஸ்ட் மாதம் ஒரு நள்ளிரவில் ராணுவம் எங்கள் கிராமத்தைச் சூழ்ந்தது. எங்களை வீட்டை விட்டு வெளியே இழுத்துப் போட்டார்கள். அது திட்டமிட்ட அழிப்பு.
'லிபியா என்றாலே எண்ணெய்தான் நினைவுக்கு வரும். எங்களின் உண்மையான செல்வம் சஹாரா பாலைவனத்தின் அடியில் புதைந்திருக்கும் நன்னீர்க் கடல்' என்றான் காரீம்.













