எப்போது, எங்கிருந்து அழுத்தம் வரும் என்று தெரியாத அளவுக்கு எட்டுத் திசைகளிலும் ‘பிரஷர் குக்கர்’ வாழ்க்கைதான் பணிச்சூழலில் நிலவியது. சுற்றியிருந்த நண்பர்கள் பலர் கழன்று கொண்டபோதும், சிலர் கழட்டிவிடப்பட்டபோதும் ஒவ்வொரு நாளும் திகில் படத்தின் கிளைமாக்ஸ் போலவே இருந்தது, இருக்கிறது. ஐம்பது...
Tag - பத்மா அர்விந்த்
அமெரிக்க அரசியலில் இத்தனை நாடகத்தனமான மாற்றங்களை ஒரே தேர்தலில் பார்த்ததுண்டா? 2024 அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது.
ஒபாமா தனது சொந்தக் கட்சி உறுப்பினர்களை கூட ஒப்புக்கொள்ள வைக்கக் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. ஒரு சரியான நபர், மிக மோசமான காலக்கட்டத்தில் அதிபரானதன் விளைவு.
உலகப் பொருளாதாரத்தின் அச்சாணி என்று பறைசாற்றிக்கொண்டிருந்த அமெரிக்கப் பொருளாதாரம் சரியத் தொடங்கிய இருண்ட காலம் அது. அமெரிக்க நெருக்கடி உலகம் முழுவதையும் பாதித்தது.
"வங்கிகள் அழிந்தால் பொருளாதாரம் அழிந்துவிடும்" என்ற காரணத்தால் அரசு அவர்களைக் காப்பாற்றியது. சாமானிய மக்களோ வீதிக்கு வந்தனர். வங்கிகள் பத்திரங்களை உலக நிதிச் சந்தையில் விற்று லாபம் ஈட்டின. அதனால் உலகப் பொருளாதாரமே பாதிக்கப்பட்டது.
இந்தச் சோகத்தின் பின்னணியில், அமெரிக்கக் கனவின் இருண்ட பக்கம் வெளிச்சத்திற்கு வந்தது - கடனில் கட்டப்பட்ட அந்தக் கனவு, எவ்வளவு எளிதாக நொறுங்கிப் போகக்கூடியது என்பதை உலகிற்கு விளக்கிச் சொன்னது.
ஈரான் மீது போர் தொடுக்க முன் அனுமதி பெற வேண்டிய தேவையை ராணுவச் செலவின மசோதாவிலிருந்து நீக்கினார் புஷ். ஈரான்-ஈராக் எல்லையில் மிகப் பெரிய குழப்பம் ஏற்பட்டது.
தொலைக்காட்சி நேரலையில் ஹார்டி ஜாக்சனின் வீடு இரண்டாகப் பிளந்த காட்சி தெரிந்தது. கண் முன்னே மனைவி காற்றில் பறந்து போவதைத் தடுக்க முடியாமல் அவர் தவித்துக்கொண்டிருந்தார்.
இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பிறகு, இன்று வரையிலான அமெரிக்காவின் வரலாற்றைப் பேசுகிற இந்தத் தொடர் ஒரு வகையில் உலகின் கால் நூற்றாண்டு வரலாறும்கூட. நல்லதும் கெட்டதுமாக நாம் அனுபவிப்பவை அனைத்திலும் அமெரிக்காவின் பங்கு இல்லாதிருப்பதில்லை அல்லவா?
காலம் என்னவோ எந்தவிதத் தடுப்புகளும் பிரிவுகளும் இல்லாமல் வற்றாத நதிபோல ஓடிக்கொண்டிருக்கிறது. வாரம், மாதம் வருடம் என்பதெல்லாம் நமக்காக நாம் ஏற்படுத்திய கணக்குதான். நான் தற்காலம் என்று சொல்லி முடிப்பதற்குள் அந்த நொடி கடந்த காலமாகி இருக்கும். நான் எதிர்காலமென நினைத்த நொடியில் நுழைந்துவிட்டிருப்பேன்...












