Home » சிவராமன் கணேசன் » Page 3

Tag - சிவராமன் கணேசன்

தொடர்கள் நீலமலை ரகசியம்

நீலமலை ரகசியம் – 18

18. ஓர் ஏரி, ஓர் இரங்கல் ஊட்டியில் சல்லிவனின் கல்வீடு எழுந்துகொண்டிருந்தது. அவர் திம்மட்டிக்கும், ஊட்டிக்கும், கோயம்புத்தூருக்குமாக தனது ஜாகையை மாற்றிக்கொண்டிருந்தார். சரி, ஊட்டி வசப்பட்டுவிட்டது. ஒரு வீடு எழுகிறது. தன் இடம் உறுதியாகிவிட்டது. தன் கனவான பிரிட்டிஷ் குடியேற்றத்தை இங்கு உருவாக்க...

Read More
தொடர்கள் நீலமலை ரகசியம்

நீலமலை ரகசியம் – 17

17. சாலை, கல்வீடு மற்றும் ஊட்டி அதுவரை கோயம்புத்தூரைத் தலைமையிடமாகவும், திம்மட்டியை வாழிடமாகவும் கொண்டு சல்லிவன் தனது அலுவல்களைப் பார்த்துவந்தார். இப்போதைய கோத்தகிரி வழியாக கோயம்புத்தூரிலிருந்து குதிரை வண்டிகள் வசதியாக வந்து. செல்லுமளவுக்குப் பாதை அமைக்கப்பட்டது. பெர்க்மான்ஸின் சீரியத் திட்டம்...

Read More
தொடர்கள் நீலமலை ரகசியம்

நீலமலை ரகசியம் – 16

16. வொட்டகமண்ட் வொட்டகமண்ட் என்பது ஆங்கிலேயரின் வாயில் நெரிபட்ட, தோடர்கள் அல்லது படுகர்கள் புழங்கிய ஒரு வார்த்தை என்பதைத் தனியாக விளக்கிச் சொல்லவேண்டியதில்லை. அது சல்லிவன் குழுவினருக்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும் நாவில் நுழையாத சொல்லாக, வொட்டகமண்ட் என்றே பதிந்து போயிற்று. எத்தனை திருத்தமாகச்...

Read More
தொடர்கள் நீலமலை ரகசியம்

நீலமலை ரகசியம் -15

திம்மட்டி திம்மட்டி, மலை மேல் அமைந்த ஒரு கிண்ணம் போன்ற சமவெளியாக இருந்தது. பெரிய புல்வெளியும், ஆங்காங்கே நீரோடைகளும், எப்போதும் கனிவாக வீசிக்கொண்டிருக்கும் குளிர்காற்றும் சல்லிவனை வசீகரித்துக்கொண்டே இருந்தன. மலைப்பயணத்தால் நிறம் குறைந்திருந்த அவர் சரீரம் இப்போது மெள்ள ஆரஞ்சு நிறத்துக்கு மாறி...

Read More
தொடர்கள் நீலமலை ரகசியம்

நீலமலை ரகசியம் – 14

14. முதற்கனி மூன்று ஆங்கிலேயர்கள் வீழ்ந்து இறந்ததில் மொத்தக் குழுவும் அதிர்ந்து போனது. என்ன நடந்ததென்று உணர்வதற்கு முன்பே, அத்தனையும் முடிந்து அடங்கிவிட்டது. குழப்பமும், கோபமும், சோகமும், அதிர்ச்சியும் சூழ மொத்தக் குழுவினரும் சோர்வுற்றுப் போயினர். அங்கேயே தரையைச் சமன்படுத்தி, பாதுகாப்பு...

Read More
தொடர்கள் நீலமலை ரகசியம்

நீலமலை ரகசியம் – 13

13. ஏணியும் பாம்புகளும் அவர்கள் மலையேறத் தொடங்கியிருந்தார்கள். அத்தனை பெரிய குழுவின் மலையேற்றத்தை அந்த அமைதியான வனம் விரும்பவில்லை. காட்டு விலங்குகளின் உறுமல்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தன. பறவைகள் குழுக் குழுவாகப் பறந்து மற்ற விலங்குகளுக்குச் செய்தி சொல்லிக்கொண்டிருந்தன. சூரியன் வந்த பிறகும்...

Read More
தொடர்கள் நீலமலை ரகசியம்

நீலமலை ரகசியம் – 12

12. கனவேற்றம் ஆயிரத்து எண்ணூற்றுப் பத்தொன்பதாம் வருடம், ஜனவரி மாதம் ஆறாம் தேதி. அதிகாலை மார்கழிக் குளிரில் உறைந்து போய் ஊரே அடங்கிக்கிடந்த வேளை. கோயம்புத்தூர் எல்லையில் தீப்பந்தங்களும், புழுதியுமாய் பரபரப்பு விரவி, மனிதக்குரல்களும் விலங்குக் குரல்களும் இணைந்து குழப்பமான ஓசைகளை...

Read More
தொடர்கள் நீலமலை ரகசியம்

நீலமலை ரகசியம் – 11

11. புறப்பாடு அறுவை சிகிச்சை நிபுணரும் அரசாங்க மருத்துவருமான ஜோன்ஸ், கோயம்புத்தூர் வந்து சேர்ந்த பிறகு சல்லிவனின் மனோதைரியம் இன்னும் பெருகியிருந்தது. இயல்பாகவே அவருக்கு மனவெழுச்சியும், உத்வேகமும் அதிகம்தான் என்றாலும், சமீப நாள்களாக மலையேற்றத்துக்கு எல்லாப் பக்கத்திலிருந்தும் திரண்டு வரும் எதிர்ப்பு...

Read More
தொடர்கள் நீலமலை ரகசியம்

நீலமலை ரகசியம் – 10

10. தீர்வுக் காண்டம் ஜோன்ஸ் என்ற பெயரையோ, அப்படி ஓர் அறுவைச் சிகிச்சை நிபுணர் கோயம்புத்தூரில் இருப்பதையோ சல்லிவன் அறிந்திருக்கவில்லை. அவர் முகமும் பரிச்சயமற்ற ஒன்றாகவே இருந்தது. சற்று யோசனையுடன்தான் கைகுலுக்கினார். ஜோன்ஸ் பேச ஆரம்பித்தபிறகு அவரின் குழப்பங்கள் தீர்ந்தன. ‘மதிப்பிற்குரிய...

Read More
தொடர்கள் நீலமலை ரகசியம்

நீலமலை ரகசியம் – 9

9. காரியத் தடைகள் 1818ஆம் வருடம் டிசம்பர் மாதம் மதராஸ் மாகாண கவர்னர் தாமஸ் மன்றோ, சல்லிவனின் நீலமலை மலையேற்றத்திற்கு அனுமதி கொடுத்திருந்தார். திட்ட வரைவை அங்கீகரிப்பதாகவும், ஆறு மாதங்களுக்குள் ஆய்வு முடிவுகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஆணையிட்டிருந்தார். பயணத்திற்கு சல்லிவன் கேட்டிருந்ததை விட...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!