Home » நீலமலை ரகசியம் – 10
தொடர்கள் நீலமலை ரகசியம்

நீலமலை ரகசியம் – 10

10. தீர்வுக் காண்டம்

ஜோன்ஸ் என்ற பெயரையோ, அப்படி ஓர் அறுவைச் சிகிச்சை நிபுணர் கோயம்புத்தூரில் இருப்பதையோ சல்லிவன் அறிந்திருக்கவில்லை. அவர் முகமும் பரிச்சயமற்ற ஒன்றாகவே இருந்தது. சற்று யோசனையுடன்தான் கைகுலுக்கினார். ஜோன்ஸ் பேச ஆரம்பித்தபிறகு அவரின் குழப்பங்கள் தீர்ந்தன.

‘மதிப்பிற்குரிய கலெக்டர், நான் ஜோன்ஸ், அசிஸ்டெண்ட் சர்ஜியன். சென்னையிலிருந்து கவர்னரின் சிறப்பு ஆணையின்படி உங்களைச் சந்திக்க வந்திருக்கிறேன். அதற்கான அங்கீகாரக் கடிதம் தபாலில் அனுப்பினால் தாமதமாகும் என்பதால் என் கையாலேயே உங்களிடம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தேன். மூன்று நாள் பயணம் செய்து வந்த களைப்பால், நாளைக் காலை உங்களை அலுவலகத்தில் சந்திக்கலாம் என்று திட்டமிட்டிருந்தேன். நீங்கள் இங்கே வருவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. இப்படி மனமகிழ் மன்றத்தில் உங்களை முதன்முறை சந்திப்பதற்காக வருந்துகிறேன்’ என்றார்.

அவர் குரல், உடல்மொழி, தேர்ந்தெடுத்துப் பேசிய வார்த்தைகள் எல்லாவற்றிலும் ஒரு தோரணை இருந்தது. நான் பொறுப்பானவன். எனக்கு வழங்கப்படும் வேலைகளை முழுமையாக, திறமையாகக் கையாள்பவன் என்கிற செய்தி இருந்தது. சிறந்த நிர்வாகியான சல்லிவனுக்கு அவரைப் பார்த்தவுடனேயே பிடித்துவிட்டது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!