ஆப்கனிஸ்தானிலுள்ள இந்தியப் பிரதிநிதிகள் அலுவலகம், இந்தியத் தூதரகமாக மாற்றப்பட்டுள்ளது. ஆப்கனின் வளர்ச்சிக்கு காபூலில் உள்ள இந்தியத் தூதரகம் உதவும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அண்மையில் இரு நாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடந்தது நினைவிருக்கலாம்.
ஆப்கனிஸ்தான் பல்வேறு பழங்குடி இனக்குழுக்களைக் கொண்ட நாடு. தாலிபன்கள் தெற்கு ஆப்கனைச் சேர்ந்தவர்கள். பஷ்தூன் பழங்குடி இனத்தவர்கள். ஆப்கனிஸ்தானின் வடகிழக்கு எல்லையோரத்தில் உள்ளது தஜிகிஸ்தான் பிராந்தியம். அங்கிருப்பவர்கள் தஜிக் இனக்குழுவினர்.
1979இல் தாலிபன், வடக்குக் கூட்டணி போன்ற பெயர்களெல்லாம் பிறந்திருக்கவில்லை. சோவியத் ஆதரவு பெற்ற கம்யூனிஸ்ட் ஆட்சி ஆப்கனை ஆண்டு கொண்டிருந்தது. இந்த ஆட்சியை எதிர்த்துப் பல்வேறு குழுக்கள் தனித்தனியாகச் சோவியத் படைகளுடன் மோதிக் கொண்டிருந்தன. முஜாகிதீன் என்னும் போராளி இயக்கம் (தஜிக், உஸ்பெக் மற்றும் ஹசராக்கள்) சில இனக்குழுக்களை ஒருங்கிணைத்தது. ஆளும் அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட்டு 1992இல் முஜாகிதீன்கள் ஆட்சியைப் பிடித்தனர். எந்த இனக்குழு நாட்டை ஆள்வது என்று அவர்களுக்குள் அடித்துக் கொண்டதால் ஆப்கனில் உள்நாட்டுப் போர் மூண்டது.














Add Comment