தொடர்புகளைத் துலக்கும் அறிவியல்
பிரேமானந்தாவை நாம் மறந்திருக்க மாட்டோம். தமிழகத்தில் ஆசிரமம் நடத்திவந்தவர். வெகுவான பக்தர்களைக்கொண்டிருந்தவர். தொண்ணூறுகளின் முதற்பாதியில் அவரது வீழ்ச்சி தொடங்கியது. பல்வேறு பாலியல் வன்புணர்வுப் புகார்கள் அவர்மீது எழுந்தன. கொலைக்குற்றங்களும் அவற்றில் அடங்கும்.
தன்னுடைய பக்தைகளை அவர் பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் பலமுறை கருக்கலைப்பு செய்ததாகவும் கூறப்பட்டது. பாதிக்கப்பட்ட ஒரு பக்தை தப்பிவந்து போலீசில் புகாரளித்தர். பிறகு, இவ்வழக்கு தேசிய அளவில் கவனம் பெற்றது. வன்புணர்வுக்குள்ளான ஒரு பக்தைக்குக் குழந்தையும் பிறந்திருந்தது. அக்குழந்தை பிரேமானந்தாவுக்கு எதிரான வலுவான சாட்சியாகியது
டிஎன்ஏ ஆய்வில் பிரேமானந்தாதான் அக்குழந்தையின் தந்தை என்பது உறுதியானது. இந்தியாவில் Paternity எனப்படும் தந்தைவழித்தொடர்பைக்கொண்டு தீர்க்கப்பட்ட முதற்சில வழக்குகளுள் ஒன்றென்பதால் இவ்வழக்கு முக்கியத்துவம் பெறுகிறது.
டிஎன்ஏ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எவ்வாறு பெற்றோர்வழித்தொடர்பு கண்டறியப்படுகின்றது? வாருங்கள். உள்ளே புகுந்து அலசிவிடுவோம்.
Add Comment