உடனிருக்கும் உளவாளி
பள்ளியிலிருந்து அழுதுகொண்டே வீட்டுக்கு வந்தாள் அந்த நான்காம் வகுப்புச்சிறுமி. ‘என்னடா கண்ணு ஆச்சி?’ என்று பதற்றத்துடன் கேட்டார் அவளது தாத்தா. பேத்தி கூறியதைக்கேட்டு அதிர்ந்து போனார். தன்னுடைய வீட்டுப்பாட நோட்டைத் தனது ஆசிரியரிடம் சரிபார்ப்பதற்காகக் காட்டியுள்ளாள் அச்சிறுமி. ஆசிரியர், காலை அகட்டிவைத்து நிற்குமாறு சொல்கிறார்.
கபடமறியாச் சிறுமியும் அவ்வாறே செய்திருக்கிறாள். ஆசிரியரின் கைப்பேசி, ஒளிப்பதியும் நிலையில் அச்சிறுமியின் கால்களுக்கிடையே வைக்கப்பட்டிருந்ததை அவளறியவில்லை. அருகிலிருந்த அவளது தோழி, அதனைச் சுட்டிக்காட்டி எச்சரிக்கிறாள். அவமானம் பிடுங்கித்தின்ன, அழுதுகொண்டே வீட்டிற்கு வந்திருக்கிறாள் குழந்தை.
இதற்கிடையே, இச்செய்தி பள்ளி நிர்வாகத்துக்குத் தெரியவந்தது. நிர்வாகம் அந்த ஆசிரியரை அழைத்துக் கடுமையாகக் கண்டித்தது. தான் எதுவும் செய்யவில்லை என்று மறுத்தார் ஆசிரியர். தான் எடுத்த வீடியோவையும் அழித்துவிடுகிறார். தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். ஆசிரியரிடம் கைப்பற்றப்பட்ட திறன்பேசி தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
Add Comment