Home » தடயம் – 21
தடயம் தொடரும்

தடயம் – 21

துப்பாக்கியால் பேசியவர்கள்

தொழிலதிபர் விஜய ரெட்டியின் அலுவலகம் வந்துவிட்டது. ஜீப்பிலிருந்து இறங்கினார் காவல் ஆய்வாளர் வேணி. அவர் கையாளப்போவது ஹை ப்ரொஃபைல் கேஸ். வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் சிறிது அலட்சியம் நேர்ந்தாலும் நீதிமன்றக் குறுக்கு விசாரணையில் அவமானப்பட நேரிடும் என்பதை அவரறிவார். அதனால், சம்பவயிடத்துக்கு வரும் வழியிலேயே ஃபாரென்சிக் ஆய்வகத்திற்குத் தகவல் அளித்திருந்தார்.

சம்பவயிடம் ரெட்டியின் அலுவலகத்தில் அவரது தனியறை. விஜய ரெட்டி அவரது மேசைக்கருகில் சரிந்து கிடந்தார். இடதுபக்க நெஞ்சுப்பகுதியில் வட்டவடிவத் துளையொன்று இருந்தது. துப்பாக்கிக் குண்டினால் மட்டுமே அத்தகைய காயத்தை உண்டாக்கமுடியுமென்று காதுகளில் கிசுகிசுத்தது வேணியின் அனுபவம். மல்லாந்து கிடந்த ரெட்டியின் முதுகுப் பக்கத்திலிருந்து இரத்தம் ஊர்ந்து வெளியேறி, தரையில் பரவிக்கொண்டிருந்தது. அறைக்கதவு உள்பக்கமாகத் தாளிடப்பட்டிருந்தது. போராட்டம் நிகழ்ந்ததற்கான எந்த அறிகுறியும் அறையில் இல்லை.

தற்கொலை என்று கச்சிதமாக முடித்துவிட்டிருக்கலாம்தான். ஆனால், பாழாய்ப்போன துப்பாக்கியைக் காணவில்லையே. இந்த ஒரேயொரு விஷயம், ஆனால் முக்கியமான விஷயம், நிகழ்ந்திருப்பது கொலை எனப் பறைசாற்றுகிறது. அறையில் ஃபிரெஞ்சுச் சாளரம் ஒன்று இருந்தது. அதன்வழியே தாராளமாக, ஒரு மெலிந்த ஆள் வெளியேறியிருக்க முடியும். அதன் வழியாகத்தான் அலுவலக உதவியாளர் உள்நுழைந்து அறைக்கதவின் தாழ்ப்பாளை நெகிழ்த்தியிருந்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!