அறுக்க இயலாத மெல்லிழை
பொதுமக்களுக்கு நன்கு பரிச்சயமான ஒன்று டிஎன்ஏ தடயவியல். பல்வேறு ஊடகங்களின் வாயிலாக டிஎன்ஏ ஆய்வு என்பது பிரபலமாகியுள்ளது. மற்ற தடயவியல் முறைகளோடு ஒப்புநோக்குகையில் டிஎன்ஏ தடயவியலின் வயது குறைவு. பல வருடங்களாகவே டிஎன்ஏவைப்பற்றி ஆய்வாளர்கள் அறிந்திருந்தனர். ஆயினும், அதன்மூலம், ஒவ்வொரு மனிதனையும் அடையாளங்காணலாம் என்பதை எண்பதுகளில்தான் கண்டறிந்தனர்.
டிஎன்ஏ வகைப்பாட்டியல் என்ற இக்கண்டுபிடிப்பு, தடயவியலுக்குப் புதுரத்தம் பாய்ச்சியது. தடயவியல் ஆய்வகங்களின் திறன் மேலும் கூடியது. டிஎன்ஏ வகைப்பாட்டியலின் இரும்புப்பிடிக்குள் சிக்கி, ஏகப்பட்ட குற்றவாளிகள் தண்டனை பெற்றுள்ளனர். அதேநேரம், எண்ணற்ற அப்பாவிகள் விடுவிக்கப்பட்டும் உள்ளனர். இந்த ஆயுதத்தால் தாக்கப்பட்ட முதற்குற்றவாளி, காலின் பிட்ச்ஃபோர்க் என்பவனாவான்.
பிட்ச்ஃபோர்க் தன்னுடைய விடலைப்பருவத்திலேயே தற்காட்டல்வேட்கை என்ற உளவியல் நோய்க்கு ஆளாகியிருந்தான். Exhibitionism என்றழைப்பர். இவர்கள் தங்களுடைய பாலுறுப்பை எதிர்பாலினத்தவருக்குத் திறந்துகாட்டி இன்பமடைபவர்கள். தன்னுடைய பத்தொன்பதாவது வயதில் முதல் வன்புணர்ச்சியைச் செய்தான் பிட்ச்ஃபோர்க். அச்சிறுமியின் வயது பதினாறு. இக்குற்றத்தில், போலீசாரின் கைகளில் பிட்ச்ஃபோர்க் சிக்கவில்லை.
Add Comment