செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் பிரிட்டனில் உள்ள ஊடகங்களில் ஒரு சுவாரசியமான செய்தி வெளி வந்தது. ஸ்காட்லாந்தில் ஜெட்பரோ எனப்படும் சிறு நகரம். அதற்கு அருகாமையில் ஆங்கிலத்தில் woodlands அழைக்கப்படும் மரங்கள் ஓரளவு அடர்த்தியாக இருக்கும் நிலங்கள் உண்டு. இப்படியான ஒரு தனியாருக்குச் சொந்தமான காட்டு நிலத்தில் இருந்து ஆப்பிரிக்கப் பழங்குடியினரை வெளியேறும்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பதுதான் அது.
ஸ்காட்லாந்து, பிரிட்டனின் வடக்குப் பகுதியில் உள்ளது. ஆப்பிரிக்கா எனும் கண்டம் பிரிட்டனுக்குச் சில ஆயிரம் மைல்கள் தெற்கே உள்ளது. புவியியலின்படி அக்கண்டத்திலிருந்து இத்தனை தூரத்தில் உள்ள பிரிட்டனின் ஒரு பகுதியில் ஆப்பிரிக்கப் பழங்குடியினரா?
பொதுவாகப் பழங்குடியினர் என்றால் மனிதகுலத்தின் தற்காலத்து நவநாகரீகங்களுக்குள் ஈர்க்கப்படாமல் பழைய மரபு வாழ்க்கை நடத்தும் சமூகத்தினர் என்று அர்த்தம். மனிதர்கள் செல்லாத அடர்ந்த காட்டில் பழங்குடியினர் என்றால் கூட இதுவரை அவர்கள் மற்றவர்கள் கண்களில் படவில்லை என்று யோசிக்கலாம். ஆனால் இந்தப் பழங்குடியினர் பற்றிய செய்தி குறிப்பிடுவது ஒரு சிறு நகரத்துக்கு வெளியே உள்ள மரக்காடுகளைப் பற்றி. அது தனியாருக்குச் சொந்தமான நிலம். அங்கே ஆப்பிரிக்கப் பழங்குடி மக்கள் வாழ்கிறார்கள் என்றால் நம்பக் கூடிய செய்தியா? ஆனாலும் அந்தச் செய்தி உண்மையானதே.














Add Comment