அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பது பழங்காலச் சொலவடை. அமெரிக்கா அன்றி ஓரணுவும் அசையாது என்பது நவீனச் சொலவடை. அதிபர் ஜோ பைடனும் அவரது நிர்வாகமும் ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையே நிகழும் உரசல்களில் ஜனநாயகம் பக்கம் நிற்பதை அடியொட்டியே பன்னாட்டுக் கொள்கைகளில் முடிவெடுக்கிறார்கள்.
மக்களின் நலனும் மக்களாட்சியுமே அமெரிக்காவின் விருப்பமாக இருக்கிறது. அதே அமெரிக்கா அவ்வப்போது எதேச்சாதிகார நாடுகளுடன் நட்பு பாராட்டுவது இந்த உத்தேசத்தைக் கேள்விகளுக்கு உட்படுத்தி இருக்கிறது ஆனால் நீண்ட கால உலக நலனை உத்தேசித்து சில சமயம் தன் கொள்கையை விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் அமெரிக்காவுக்கும் இருக்கிறது.
WHO/UN:
ஐக்கிய நாடுகள் சபையின் 2023 வருட நிர்வாகத்திற்குத் தேவையான மொத்த 3.3 பில்லியன் டாலர்கள் நிதியில் முறையான நிதிக்கு 22 சதவீதமும் உலக அளவில் அமைதியை நிலைநாட்டவும் மனிதாபிமானச் செயல்களுக்காக 26 சதவீதமும் அமெரிக்கா தந்திருக்கிறது.
Add Comment