Home » தெலங்கானா: ஏட்டிக்குப் போட்டி
இந்தியா

தெலங்கானா: ஏட்டிக்குப் போட்டி

தெலங்கானா காங்கிரஸின் மூத்த தலைவரும் வனத்துறை அமைச்சருமான சுரேகா கொண்டாவை அமைச்சரவையிலிருந்து நீக்க அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி முடிவெடுத்துள்ளார். நீக்குவதற்கான பரிந்துரை ஒப்புதல் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து சுரேகாவின் மகள் கொண்டா சுஷ்மிதா படேல் வெளியிட்ட கருத்துகளால் சர்ச்சை எழுந்தது. கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் உள்ள பலர், சுரேகா மற்றும் சுஷ்மிதா இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதைக் கருத்தில் கொண்ட தெலங்கானா பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் (TPCC) ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா முதல்வர் அனுமுலா ரேவந்த் ரெட்டி, தெலுங்கு தேசம் கட்சியில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். 2009, 2014ஆம் ஆண்டுகளில் கோடங்கல் தொகுதிச் சட்டமன்ற உறுப்பினரானார். தெலங்கானா தனி மாநிலமாக உருவான பிறகும் தெலுங்கு தேசக் கட்சியில் செல்வாக்கு மிக்கவராகவே இருந்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!