BAPS என்ற மதக் குழுவின் வருகையால் ஈஃபிள் கோபுரத்தின் ஊழியர் சங்கங்கள் போராட்டம் நடத்தி, உலக அதிசயத்துக்கு ஒரு நாள் பூட்டுப் போட்டுவிட்டார்கள். உலகம் முழுவதும் சர்ச்சை ஏற்படுத்திய இந்த நிகழ்வில் என்ன நடந்தது?
முதலில் BAPS என்றால் யாரென்று பார்க்கலாம். கன்ஷம் பாண்டே என்பவர் 19ஆம் நூற்றாண்டில் குஜராத்தில் வாழ்ந்த ஆன்மிகத் தலைவர். பிற்காலங்களில் இவர் சுவாமி நாராயண் என அறியப்பட்டார். இவர் வழி நடப்பவர்கள் சுவாமி நாராயண் சம்பிரதாயா என்று அறியப்படுகின்றனர். இப்பிரிவு இருநூறு ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர்களுடைய கோட்பாடுகளும் அவ்வளவு பழைமையானவை.
சாஸ்திரி மகாராஜா என்பவர் முதன்முதலாக 1907இல் சுவாமி நாராயணன் மந்திர் என்று ஒரு கோவிலைத் தொடங்குகிறார். தற்போதைய நிலவரப்படி, இந்த அமைப்பினர் உலகம் எங்கிலும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களைக் கட்டியுள்ளனர். ஐம்பதாயிரம் தொண்டர்கள், பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட பற்றாளர்கள் எனப் பரந்து விரிந்துள்ளது இக்குழு. குஜராத்தில் தொடங்கப்பட்டு உலகெங்கும் வியாபித்திருக்கும் எலைட் ஆன்மிகக் குழு. பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிரிட்டிஷ் மன்னர் சார்லஸ், பில் கிளிண்டன், தலாய்லாமா போன்ற விவிஐபிக்கள் இக்குழுவுடன் தொடர்பில் உள்ளவர்கள்.
















Add Comment