Home » கடத்திக் குறை! – ஒரு மருத்துவ பயங்கரம்
குற்றம்

கடத்திக் குறை! – ஒரு மருத்துவ பயங்கரம்

Taiane Torres da Silva, 32, who works at a pet shop, self-administers a tirzepatide injection in her abdomen at home in Nova Iguacu, Rio de Janeiro state, Brazil August 17, 2026. REUTERS/Pilar Olivares

76, 000. இது கடந்த ஆறு மாதங்களில் மட்டும் பிரேசில்-பராகுவே நாடுகளின் எல்லையில் பறிமுதல் செய்யப்பட்ட எடை குறைப்பு மருந்துப் பேனாக்களின் எண்ணிக்கை. இது கடந்த ஆண்டு முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டதை விட மூன்று மடங்கு அதிகம். சிகரெட்டையும் மின்னணுச் சாதனங்களையும் கடத்திப் பழக்கப்பட்ட ஒரு எல்லையில், கருப்புத் தங்கம் என அழைக்கப்படும் உடல் எடை குறைப்பு மருந்துகள் தற்போதைய பிரதானக் கடத்தல் பொருளாக மாறிக் கொண்டிருக்கின்றன. இந்த எண்ணின் பின்னால் மூன்று நாடுகள் இருக்கின்றன. ஆயுதம் தாங்கிய கும்பல்கள் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, தன் உடலை மெலிதாக்கிக் கொள்ள விரும்பும் லட்சக்கணக்கான சாதாரண மனிதர்கள் இருக்கிறார்கள்.

பராகுவே, பிரேசில், அர்ஜென்டினா ஆகிய மூன்று நாடுகளும் ஒரே புள்ளியில் சந்திக்கும் இடம் ‘முக்கூடல் பகுதி’ (Triple Frontier) என அழைக்கப்படுகிறது. இவ்விடத்தில் பரானா நதியும் இகுவாசு நதியும் சங்கமிக்கின்றன. இவற்றின் அருகிலேயே உலகப் புகழ்பெற்ற இகுவாசு நீர்வீழ்ச்சி இரைந்து கொண்டிருக்கிறது.

பராகுவேயின் பக்கம் நிற்பது சியூடாட் டெல் எஸ்டே என்னும் தளர்வான காப்புரிமைச் சட்டங்களின் நகரம். ஆல்டோ பரானா மாகாணத்தில் அமைந்த பராகுவேயின் இரண்டாவது பெரிய நகரம் இது. வரி இல்லாத பொருட்களின் சொர்க்கம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!