Home » சென்னை என்னும் சோதனைச் சாலை
வரலாறு

சென்னை என்னும் சோதனைச் சாலை

சென்னையின் இரண்டாவது விமான நிலையத்துக்குத் தேர்வு செய்யப்பட்டிருந்த இடம் பேசுபொருள் ஆகியிருக்கிறது. இக்கால நகர வளர்ச்சியில் விமான நிலையம் இருக்கும் இடம் தலையாயதாகிவிட்டது. வணிகம் இன்னும் மேம்படும் என்கிறார்கள். ஆனால் சரக்குப் போக்குவரத்து என்னும் சொல் கடலையும் கப்பலையும் சார்ந்தது. இன்றும் உலகின் வணிகம் தொண்ணூறு சதவீதம் கடல் சார்ந்தே இருக்கிறது.

சென்னை நகரின் ஆரம்பமும் வளர்ச்சியும் ஒரு கடல் வணிகக் கம்பெனியின் ஆரம்பமும் வளர்ச்சியும் ஆகும்.

இந்தக் கம்பெனியின் கப்பல்தான் 1639இல் மசூலிப்பட்டினத்தில் இருந்து சென்னைப் பட்டணம் என்று பின்னர் ஆகப் போகும் ஊர் நோக்கி வந்தது. வந்து இறங்கப் போகும் இடம் மணல் மேடுகள். இன்றைய தமிழக சட்டமன்றம் இருக்கும் இடம். கப்பலில் இருந்தவர் ஃபிரான்சிஸ் டே என்னும் ஆங்கிலேயர். கிழக்கிந்திய கம்பெனியின் பணியாளர். தொழில் தொடங்கப் புது இடம் பார்க்கிறார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!