Home » 9/11 – தொடரும் பிரச்சினைகள்
உலகம்

9/11 – தொடரும் பிரச்சினைகள்

நியூயார்க் நகர மேயர் ஸோரான் மம்தானி, ஒரு லட்சத்து எழுபதாயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை அண்மையில் வெளியிட்டார். கால் நூற்றாண்டாக நியூயார்க் நகர நிர்வாகம் மறைத்த உண்மைகள் மீது அவை வெளிச்சம் பாய்ச்சுவதாகக் கூறினார். இன்னும் பல ஆவணங்கள் படிப்படியாகப் பொதுவெளிக்குக் கொண்டு வரப்படும் என்றும் உறுதியளித்தார். அப்படி எதைப் பற்றிய உண்மைகள் மறைக்கப்பட்டன?

2001 செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு, நியூயார்க்கின் சூழல் பாதுகாப்பு குறித்து அப்போதைய நகர நிர்வாகமும் அதிகாரிகளும் மக்களைத் தவறாக வழிநடத்தியதை இந்த ஆவணங்கள் உறுதி செய்கின்றன.

அன்று நடந்த அல்-கொய்தாவின் கொடூரத் தீவிரவாதத் தாக்குதல் அமெரிக்காவை நிலைகுலையச் செய்தது. அந்தக் கெடுநிகழ்வால் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் அமெரிக்காவில் நேரடியாகப் பலியாயினர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!