Home » உரி – 47
உரி நாள்தோறும்

உரி – 47

47. அவனும் அவனும்

மனிதர்கள் அடாரிடுவார்கள். மிருகங்கள் தமது பாதங்களில் உள்ள கண்களை மூடித் திறக்கும் இடைவெளியில் தவறி விழுந்து சிக்கிக் கொள்ளும். அடாரில் அகப்பட்ட பின்பு பாதக் கண்கள் இமைக்கவும் செய்யாது. ஆனால் அதில் பயனேதுமில்லை. சிக்கிய மிருகம் வேடுவன் சொத்து.

நான் மிருகமல்ல. அணுவினும் சிறுத்ததும் வையத்தினும் விரிந்ததுமான ஒற்றைச் சொல். மொழியற்றதால் உருவற்றதும் உச்சரிப்பற்றதால் ஒலியற்றதுமான என் தூலமும் சூக்குமமும் ஒன்றே. எப்பொறிக்கும் நான் அகப்பட வழியில்லை. என் வினாவெல்லாம் அவனது உறக்கம் ஏன் எனக்கிடப்பட்ட அடாரெனத் தோன்ற வேண்டும்? எண்ணிப் பார்த்திராத எச்சரிக்கை உணர்வு ஏன் நிறைந்து பரவ வேண்டும்? ஓடைக்கரைச் சம்பவம் காரணமாயிருக்கலாம். அல்லது நானறியாத வேறு ஏதோ ஒன்று.

அவன் உறங்க ஆரம்பித்திருந்தான். அதைக் கலைக்க விருப்பமின்றி பாரதாய தத்தன் அருகே அமர்ந்திருந்தான். அவனாக உறக்கம் கலைந்து எழாத வரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டாற்போலத் தென்பட்டது. நான் அறிவேன். இது தத்தன் சிந்தித்துப் பார்க்கக் கிடைத்திருக்கும் அழகிய அவகாசம். அவன் நிச்சயமாகச் சிந்திப்பான். உதிரம் கசியும் அளவுக்குத் தனக்குள் முரண்பட்டுச் சிதறுவான். யாருக்குத் தெரியும்? ஞானமெனும் ஒளிச் சொட்டு அவன் சிந்தைக்குள் உதிரும் தருணமாகவும் இது அமைந்துவிடலாம். மகத்தான தருணம்தான்.

இந்நொடி உறங்கும் சார்வாகனை விடுத்து, அருகிருக்கும் தத்தனின் சிந்தைக்குள் நான் புகுந்தால் நன்றாகவே இருக்கும். ஒரு புறத் தூண்டல் அவனை எந்த விதமாகச் செலுத்திச் செல்கிறது என்று கண்டறிவேன். அது ரசமிக்க அனுபவமாக இருக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!