சுமார் 110 வருடங்களுக்கு முன்பு… பெரிதாக வான்வழிப் பயணங்கள் எல்லாம் சாத்தியப்படாத காலகட்டம். கடல் கடந்து செல்ல ஒரே வழி தான், கப்பல் போக்குவரத்து. கப்பல் கட்டும் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு மிகப்பெரிய கப்பல்களை உருவாக்கிக் கொண்டிருந்தனர். ஒயிட் ஸ்டார் லைன் எனும் மிகப்பெரிய கப்பல் கட்டும் நிறுவனம் மூன்று பயணிகள் சொகுசு கப்பலை உருவாக்கியது. முதல் கப்பல் RMS ஒலிம்பிக். இரண்டாவது RMS டைட்டானிக். மூன்றாவதை விடுங்கள் அது எந்த விதத்திலும் பிரசித்தம் இல்லை.
மூன்று கப்பல்களும் சொகுசான கப்பல், உலகத்திலேயே மிகப் பெரிய கப்பல் என்று பட்டிதொட்டி எங்கும் விளம்பரப்படுத்தப்பட்டன. பயங்கரமான எதிர்பார்ப்புகளுக்கு இடையில் கடலுக்கு வந்தன. இவை மூழ்கவே முடியாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. எப்பேர்ப்பட்ட அலை வந்தாலும் அதைத் தாண்டி, மிதந்து செல்லும் வல்லமை பெற்றது. வெள்ளமே வந்தாலும் மிதக்கும். உடைக்கவே முடியாத இரும்புக்கோட்டை என்றெல்லாம் சொல்லப்பட்டது. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஒரு கப்பல் மூழ்கிக் கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில், இது மிகப் பெரிய புரட்சி.
Add Comment