Home » திறக்க முடியாத கோட்டை – 17
திறக்க முடியாத கோட்டை தொடரும்

திறக்க முடியாத கோட்டை – 17

தோல்வியடைந்த ராணுவ சதி

17 – இரண்டாவது சுதந்திரம்

18 – ஆகஸ்ட், 1991
கர்பச்சோவின் ஓய்வு இல்லம்
கிரீமியா.

அரசாங்க உயரதிகாரிகள் நால்வர் அழைப்பின்றி கர்பச்சோவைச் சந்திக்க வந்தனர். இரண்டு கையெழுத்துகளை மட்டும் கோரினர். ஒன்று நாட்டில் அவசர நிலையைப் பிரகடனம் செய்வதற்கு. மற்றொன்று துணை அதிபர் கெனாடி எனாயெவ் பெயருக்கு அதிகாரத்தை மாற்றுவதற்கு. கே.ஜி.பி.யின் தலைவரும் உடனிருக்க, வெளியுலகத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. வழக்கம்போல இச்சூழ்நிலையில் இருப்பவர்கள், ஆணைக்குக் கட்டுப்பட்டு வேண்டியதைச் செய்வார்கள். ஆனால் கர்பச்சோவ் மறுத்தார். கடும் வீட்டுக் காவலிலும், ரகசியமாக மாஸ்கோவிற்குச் செய்தி அனுப்பினார். அங்கு நடப்பவற்றையும் அறிந்து கொண்டார்.

அடுத்த நாள் காலை, மாஸ்கோ ரேடியோக்களின் உதவியுடன் எனாயெவ் அதிபரானார். கர்பச்சோவின் மோசமான உடல்நிலை காரணமாக அறிவிக்கப்பட்டது. கூடவே தந்தை நாட்டிற்கு ஆபத்து எனவும் செய்தி சேர்த்துக் கொள்ளப்பட்டது. எட்டுப் பேர் கொண்ட அவசரநிலைக் குழு, அவசரமாகப் பத்திரிகைகளையும், போராட்டங்களையும் முடக்கின. ஆனால் மக்கள் அடங்கிப் போய்விடவில்லை. இராணுவ பீரங்கிகள் சாலைகளைக் கட்டுப்படுத்தக் களமிறங்கின. மக்கள் சமாளித்தார்கள். இந்த அரசியல் சூழ்ச்சியை யாரும் ஏற்றுக்கொள்வதாக இல்லை. அடுத்த நாளே, நாடாளுமன்ற வளாகம் முன்பு தடுப்புகளை அமைத்துக் காவல் காத்தனர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!