Home » திறக்க முடியாத கோட்டை – 20
திறக்க முடியாத கோட்டை தொடரும்

திறக்க முடியாத கோட்டை – 20

செச்னிய யுத்தம்

20 – ஏழு தலைமுறை மரணத்தின் காரணங்கள்

14-ஜூன்-1995. புத்யோனஸ்க் நகரம், ரஷ்யா.

மூன்று கார்கோ – 200 லாரிகள் நண்பகல் நேரத்தில் நகரத்திற்குள் நுழைகின்றன. போரில் இறந்த வீரர்களின் சவப்பெட்டிகளை, அவரவர் வீடுகளுக்குக் கொண்டு சேர்ப்பவைதான் கார்கோ – 200. ரஷ்ய ராணுவ உடையில் உள்ளிருந்தவர்கள் காவல்துறையின் சோதனைக்குட்பட மறுத்தனர். அதனால் லாரிகள் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டன. கடைசி லாரியிலிருந்து குதித்தவர்கள், பாதுகாப்பிற்கு வந்த போக்குவரத்துக் காவலர்களைச் சுட்டனர். முன்சென்ற லாரிகள், அமைச்சகத்தில் மீதமிருந்த காவல் துறையினரைக் கொன்று, அமைச்சகத்தைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். அருகிலிருந்த காவல் நிலையம் ராக்கெட் லாஞ்சர்கள் கொண்டு தகர்க்கப்பட்டது. நகரின் தெருக்களில் இருந்த அப்பாவிகள் மீதும் குண்டு பாய்ந்தது.

கார்கோ – 200 லாரிகளில் இருந்தது 195 செச்சனியப் போராளிகள். 300 கிமீ தொலைவில் நடக்கும் செச்சனியப் போர், ரஷ்ய நகருக்குள் நுழையும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

அடுத்த பதினைந்து நிமிடங்களில் நகரின் முக்கிய இடங்கள் கைப்பற்றப்பட்டன. மக்கள் பணயக் கைதிகள் ஆனார்கள். நகரின் நிர்வாக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். வர மறுத்தவர்கள், இருந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர். எரிபொருள் டேங்கர் லாரிகளும், உலங்கூர்திகளும் (ஹெலிகாப்டர்களும்), அவர்களைச் சுற்றி வளைத்தன. தப்பிக்க நினைத்தால், உடல் துண்டு துண்டாகச் சிதறி இறந்து போவார்கள் என்று எச்சரிக்கப்பட்டனர். பிறகு அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலிருந்த மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கிருந்தோரையும் சேர்த்து, குறைந்தது 2000 பணயக் கைதிகள் செச்சனியர்கள் வசமானார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!