கோடீஸ்வரி
ஜெய்ஸ்ரீ பிறந்தது லண்டன் மாநகரில். அவரது தந்தை ஒரு இயற்பியல் நிபுணர். ஐந்து வயதளவில் பெற்றோருடன் இந்தியா சென்று டெல்லியிலேயே வளர்ந்தார். ஒரு கத்தோலிக்கப் பெண்கள் பாடசாலையிலேயே அவரது பள்ளிப்படிப்பு. கணிதத்திலும் அறிவியலிலும் ஆர்வம் மிக்கவராக வளர்ந்தார். தந்தைக்கு வேலை நிமித்தம் அமெரிக்காவுக்கு மாற்றம் கிடைக்க அதன் காரணமாக ஜெய்ஸ்ரீ பல்கலைக்கழகப் படிப்புக்கு அமெரிக்கா சென்றார். சான்ஃபிரான்சிஸ்கோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் எலெக்டிரிகல் எஞ்சினியரிங் துறையில் பட்டம் பெற்றார். பின்னர் சாண்டா கிளாரா பல்கலைக்கழகத்தில் பொறியியல் மேலாண்மையில் முதுநிலைப் பட்டமும் பெற்றார்.
Add Comment