அடோபியின் நாயகன்
இன்றைய காலகட்டத்தில் ஒளிப்படங்கள் அனைத்தும் முழுமையாக எந்தவித மாற்றங்களுமின்றி சமூகவலைத்தளங்களில் பகிரப்படுவதாகச் சொல்ல முடியாது. சிலர் படம் தெளிவாகத் தெரிவதற்காகச் சிறிய மாற்றங்கள் செய்வார்கள். இன்ஸ்டா, முகநூல் போன்ற தளங்கள் ஃபில்டர்களும் கொடுத்து உதவி செய்கின்றன. சிலர் அதைவிடப் பல படிகள் மேலே போய் ஒருவரின் உருவ அளவையே மாற்றம் செய்யும் வேலைகளும் செய்வார்கள். இப்படியான மாற்றங்கள் செய்வதற்கான போட்டோ எடிட்டிங் செயலிகள் நிறையவே உள்ளன. ஆனாலும் கடுமையான எடிட் செய்யப்பட்ட போட்டோ என்றால் நாம் பொதுவாகச் சொல்வது “அது போட்டோஷாப் செய்யப்பட்ட படம்” என்பதே. அந்தளவுக்கு போட்டோஷாப் எனும் செயலியின் பெயர் வினைச் சொல்லாகிவிட்டது.
Add Comment