பயணம் என்றாலே ஏகப்பட்ட முன்னேற்பாடுகள், செலவுகள், குதூகலத்தை மீறிய படபடப்பு என்பதெல்லாம் வாடிக்கைதான். இவை எதுவும் இல்லாமல் குறைந்த செலவில் நிறைய இடங்களைச் சந்தோஷமாகச் சுற்றிப் பார்த்து, பணமும் சம்பாதிக்க முடியும் என்றால் நம்புவீர்களா? அதைத்தான் travel vloggerகளாகப் பலரும் செய்கிறார்கள்.
பயணம் செய்வதும், அதனைப் பதிவுசெய்வதும் மார்கோபோலோ, இபின் பட்டுடா, ஹுவான்சாங், கிறிஸ்டோபர் கொலம்பஸ், கேப்டன் ஜேம்ஸ் குக், மெகஸ்தனிஸ் என்று தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
அவர்கள் வரிசையில், அமெரிக்கத் தம்பதியான ஹேலியும் சாக்கும் 2022 பிப்ரவரியில் தங்கள் வேலையை விட்டுவிட்டு 1199 யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தலங்களையும் பார்வையிடும் நோக்கத்தில் முழுநேரப் பயணியர் ஆனார்கள். மூன்று ஆண்டுகளில் (2022-2024) கிழக்கு ஐரோப்பா, ஆசியா, தென் அமெரிக்கா கண்டங்களில் உள்ள 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளனர். 834 நாட்களில் தினமும் சுமார் 3,700 ரூபாய் மட்டுமே செலவு. ஒவ்வொரு நாட்டுக்கும் சராசரியாக 52,000 ரூபாய்.














Add Comment