பயணிகள் விமானம் இரத்தாவது அண்மையில் அதிகரித்துள்ளது. பாதுகாப்பில் சிறு சந்தேகம் வந்தாலும் விமானம் தரை விலகலாகாது. இவ்வருடத்தில் இதுவரை இரு பெரும் விமான விபத்துகள் நடைபெற்றுள்ளன. இத்துயரச் சம்பவங்கள் காரணமாகப் பலருக்கும் விமானப் பயணம் குறித்த அச்சமும் எதிர்மறை எண்ணங்களும் நிச்சயம் அதிகரித்திருக்கும்.
முதல் விபத்து ஜனவரி 29ஆம் தேதி அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் DCயில் நடந்தது. சர்வதேச விமான நிலையம் அருகிலேயே பயணிகள் விமானம் ஒன்றும் இராணுவ ஹெலிகாப்டர் ஒன்றும் நடுவானில் மோதிக்கொண்டதில் அறுபத்தியேழு பேர் உயிரிழந்தனர்.
இரண்டாவது, ஜூன் 12ஆம் தேதி நடந்த ஏர் இந்தியா விபத்து. அகமதாபாத்திலிருந்து இலண்டனுக்கு புறப்பட்ட பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 260 பேர் மரணமடைந்தனர். இதன் உடனடி விளைவாக ஏர் இந்தியா நிறுவனம் தன்னிடமுள்ள போயிங் (Boeing) விமானங்களின் பாதுகாப்பையும் நம்பகத்தன்மையையும் உறுதி செய்யும் எச்சரிக்கை உணர்வுடன் அவற்றின் பயன்பாட்டைக் குறைத்தது. இதனை ‘safety pause’, அதாவது பாதுகாப்பு இடைநிறுத்தம் என்று குறிப்பிட்டுள்ளது.















Add Comment